வியாழன், 19 ஏப்ரல், 2018

பஞ்சாப் காலிஸ்தான் விடுதலை படை அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்

  காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்dinamalar :பாடியாலா: காலிஸ்தான் விடுதலை படை  அமைப்பின் தலைவன் மாரடைப்பு காரணமாக சிறையில் இறந்தார். பஞ்சாபில்காலிஸ்தான் விடுதலை படை அமைப்பை நிறுவியவர் ஹர்மீந்தர்சிங் மின்டோ.
பல்வேறு போராட்ட  செயல்களில் ஈடுபட்ட இவர் கடந்த 2014-ம் ஆண்டு மலேஷியாவில் இருந்து இந்தியாவிற்கு வந்திறங்கியவரை டில்லி விமான நிலையத்தில் வைத்து கைது செய்த போலீசார் பஞ்சாபின் நாபாஹ் சிறையில் அடைத்தனர். தற்போது பஞ்சாப் பாடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து சிறை டாக்டர்கள் பரிசோதனை செய்து. பின்னர் மேல்சிகிச்சைக்காக ரஜிந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.


2016-ம் ஆண்டு நபாஹ் சிறையில் இருந்த போது அதிரடியாக புகுந்த மர்ம கும்பல் ஹர்மீந்தர்சி்ங் உள்பட மேலும் 6 தீவிரவாதிகளை தப்பிவைக்க வைத்தது. இருப்பினும் டில்லி நிஜாமூதின் ரயில் நிலையம் அருகே பதுங்கியிருந்த ஹர்மீந்தரை போலீசார் கைது செய்து நாபாஹ் சிறையில் இருந்து பாடியாலா சிறைக்கு மாற்றினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக