திங்கள், 2 ஏப்ரல், 2018

சி பி எஸ் இ வினாதாள்களை விற்ற ஆசிரியர்கள் .. சிலர் கைது ,, இன்னும் பலர் உள்ளனர்?

Friendship behind LeakAravamudhan - Oneindia Tamil : டெல்லி: சிபிஎஸ்சி பிளஸ்2 பொருளாதார தேர்வுக்கான கேள்வித் தாள் லீக் ஆனதற்கு முக்கிய காரணம், மூன்று ஆசிரியர்களுக்கு இடையே உள்ள நட்பும், சில ஆயிரம் ரூபாய் கைமாறியதும் தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டங்கள், எஸ்.சி-எஸ்.டி., பிரிவினருக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து போராட்டம் என, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பல போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதற்கிடையே, சிபிஎஸ்சி பிளஸ்2 மற்றும் 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வின்போது கேள்வித்தாள் லீக் ஆனதால், மீண்டும் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தக் கேள்வித்தாள் லீக் விவகாரத்தில், டெல்லியைச் சேர்ந்த மதர் கானாஜி கான்வென்ட் ஸ்கூலைச் சேர்ந்த ரிஷப் மற்றும் ரோஹித் என்ற ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நண்பர்களான இவர்கள், தனியாக டியூஷன் சென்டர் நடத்தி வரும் தங்களுடைய நண்பர் தகீருக்காக, சில ஆயிரங்கள் பெற்று பிளஸ்2 பொருளாதார கேள்வித் தாளை வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளனர்.
வழக்கமாக, 10:15க்கு துவங்கும் தேர்வுக்கு, 9:45க்கு தான் ஆசிரியர்களிடம் கேள்வித்தாள் வழங்கப்படும். ஆனால், பொருளாதார தேர்வின்போது 9:15க்கே ரிஷப் மற்றும் ரோஹித்திடம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக அதை வாட்ஸ்அப் மூலம் தகீருக்கு அனுப்ப, அது வைரலாக பல மாணவர்களுக்கு பரவியுள்ளது.
இவ்வாறு 60க்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் குரூப்களுக்கு கேள்வித்தாள் சென்றுள்ளது. அனைத்து குரூப் அட்மின்களையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த ஆசிரிய நண்பர்கள் வேறு கேள்வித்தாள்களையும் லீக் செய்துள்ளனரா என்று போலீசார் விசாரிக்கின்றனர். நட்புக்காகவும் சில ஆயிரம் ரூபாய்காகவும் இவர்கள் செய்த காரியம், பல ஆயிரம் மாணவர்களை பாதித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக