திங்கள், 23 ஏப்ரல், 2018

சந்தையூர் சுவர் . "தீண்டாமை எந்த வடிவில் இருந்தாலும் அதனை ஏற்கமுடியாது" - உச்சநீதிமன்றம்

April 23, 2018: Kathiravan Mumbai : தீண்டாமை எந்த வடிவில் இருந்தாலும் அதனை
ஏற்கமுடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள ராஜகாளியம்மன் கோயிலில் ஒருபிரிவினருக்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு பிரிவினர் சுவர் எழுப்பியுள்ளனர். அந்த சுவரை அகற்ற மதுரை உயர்நீதிமன்றக்கிளை உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான அமர்வு முன்பு இன்று நடைபெற்றது.
அப்போது, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு பிரிவினர், அதே பிரிவில் உள்ள மற்றொரு சமூக மக்களுக்கு எதிராக தீண்டாமையில் ஈடுபடுவதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தீண்டாமை எந்த வகையில் வந்தாலும் அதனை நீதிமன்றம் ஏற்காது என நீதிபதிகள் எச்சரித்ததை அடுத்து, மனுதாரர் தரப்பில் அனைவரும் கோயிலுக்குள் சாதி பாகுபாடின்றி அனுமதிக்கப்படுவார்கள் என உறுதியளித்தனர்.
அரசு இடத்தில் சுவர் எழுப்பியது தவறு எனக்கூறிய நீதிபதிகள், அதுதொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.
http://ns7.tv/…/2018/untouchability-can-not-be-accepted-any…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக