வியாழன், 19 ஏப்ரல், 2018

கல்லூரி மாணவிகளை ஏற்கனவே வி வி ஐ பிக்களுக்கு .... மதுரை காமராஜ் பல்கலை கழக பேராசிரியர் விசாரணையில் ..

tamiloneindia :சென்னை: கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்திய புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நிர்மலா தேவி ஏற்கனவே பல மாணவிகளை விவிஐபிகளுக்கு விருந்தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு நாட்களாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக அதிகாரிகள் முதல் விவிஐபிக்கள் வரை பலரது பெயர்களை பேராசிரியை தெரிவித்திருப்பதாக கூறப்படுவதால், இந்த பிரச்னை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி கணிதவியல் துறை உதவி பேராசிரியை நிர்மலாதேவி, இவர், அக்கல்லூரி மாணவிகள் சிலரிடம் பேசிய ஆடியோ, வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
அதிக மதிப்பெண் மற்றும் பணம் பெற்று தருவதாகவும், அரசு வேலைக்கு உத்தரவாதம் தருவதாகவும் கூறி பல்கலைக்கழக விவிஐபிக்கள், உயரதிகாரிகளுக்காக, சில அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ளுமாறு அவர் பேசிய மாணவிகள், பெற்றோர்களிடையே பரபரப்பையும் ஏற்படுத்தியது.


நிர்மலா தேவி கைது நிர்மலா தேவியின் பேச்சுக்கு உடன்பட மறுத்த மாணவிகள் அளித்த புகாரின்பேரில், கல்லூரி நிர்வாகம் பேராசிரியை நிர்மலா தேவியை 15 நாட்கள் சஸ்பெண்ட் செய்தது. இவரை கைது செய்து நிரந்தர பணிநீக்கம் செய்யக்கோரி கல்லூரி மாணவர்கள் உட்பட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தவே, நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பிஎச்டி படிப்பு நிர்மலா தேவி அளித்த வாக்குமூலத்தில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் இளங்கலை முடித்தேன். எம்எஸ்சி அருப்புக்கோட்டையில் உள்ள மற்றொரு தனியார் கல்லூரி, எம்பில் அஞ்சல் மூலம் படித்தேன்.
சென்னை பல்கலைக்கழகத்தில் பி.எச்டி முடித்தேன். உதவி பேராசிரியருடன் பேச்சு 1995ல் ரயில்வேயில் பணியாற்றிய சரவணபாண்டியுடன் எனக்கு திருமணம் முடிந்தது. கணவருடன் சென்னையில் இருந்தேன். அவர் வெளிநாடு சென்ற பிறகு அருப்புக்கோட்டை கல்லூரியில் வேலைக்கு சேர்ந்தேன்.
கல்லூரி பணி நிமித்தமாக அருப்புக்கோட்டைக்கு வந்தபோது, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக உள்ள கருப்பசாமி மற்றும் சிலருடன் பழக்கம் ஏற்பட்டது. மாணவர்களுக்கு உதவி பல ஆண்களுடன் பேசி வந்ததால் எனக்கும், கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
நான் பி.எச்டி முடித்துள்ளதால் காமராஜர் பல்கலைக்கழக பி.எச்டி மாணவர்களுக்கு கைடாக ஆக்குவதற்கு, உதவி செய்கிறோம் என இருவரும் தெரிவித்தனர். மேலும் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சிலரது நட்பைத் தொடர்ந்து சென்னையில் உள்ள சிலரின் நட்பு கிடைத்தது.
ஆடியோ ரிலீஸ் ஆனது எப்படி அவர்கள்தான், கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தினால் பல காரியங்களை சாதிக்கலாம் என தெரிவித்தனர். இதனடிப்படையில் பேசினேன். கல்லூரி நிர்வாக குழுவில் ஏற்பட்ட மோதலால், வாட்ஸ் அப் ஆடியோவை ரிலீஸ் செய்து விட்டனர் என்று கூறியுள்ளார்.
கல்லூரி நிர்வாகத்தினர் நிர்மலாவை பலமுறை எச்சரித்தும் அவர் கேட்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. யார் யாருக்கு தொடர்பு திருச்சுழி காவல்நிலையத்தில் நடைபெற்ற விசாரணையில் காமராஜர் பல்கலைக்கழகத்தின் மிக முக்கிய விவிஐபிக்கள், உயர் அதிகாரிகள், துறைத்தலைவர்களாக உள்ள பேராசிரியர்களின் பெயர்களை நிர்மலா தேவி கூறியதாக தெரிகிறது.
15 மணிநேரத்திற்கும் மேலாக நடந்த விசாரணையில் அவர் பல முக்கிய பிரமுகர்களின் பெயர்களையும் கூறினாராம். பைரவா பாணியில் விருந்து
பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான், பேராசிரியை நிர்மலாதேவி இதுபோன்று மாணவிகளை தூண்டி இழிவான செயல்களை செய்து வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பைரவா படம் பாணியில் பல மாணவிகளை விருந்தாக்கியதாகவும் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக