திங்கள், 16 ஏப்ரல், 2018

சொட்டு நீர்கூட இல்லாத நிலை நோக்கி இந்தியா! சாட்டிர்லைட் ஆய்வு அதிர்ச்சி தகவல்


minnambalam :விரைவில் இந்தியாவிலுள்ள குழாய்களில் சொட்டு நீர்கூட வராத நிலை ஏற்படும் என்று புதிய சாட்டிலைட் ஆய்வு முறை தெரிவித்துள்ளது.
கார்டியன் இதழில் வெளிவந்துள்ள இப்புதிய முன்னெச்சரிக்கை சாட்டிலைட்டின் ஆய்வு அறிக்கையில் கூறியுள்ளதாவது:
உலகிலுள்ள நான்கு நாடுகளில் கடும் நீர்ப் பஞ்சம் ஏற்படப் போகிறது. இந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மொராக்கோ, ஈராக், ஸ்பெயின் மற்றும் இந்தியாவில் ஏற்படப்போகும் இந்த நீர்ப்பஞ்சத்தினால் இனி நீர் நிலைகள். நீர் தேக்கங்கள் ஆகிய அனைத்தும் வறண்டு போகும்.
உலகம் முழுவதும் உள்ள 5,00,000 அணைகளும் நீர்நிலைகளும் வறண்டு போகும். ஏற்கெனவே இந்தியாவில் நர்மதை நதி பங்கீடு, சாகர் அணை ஆகியவற்றில் நீர் பங்கீடு தொடர்பாகப் பிரச்சினைகள் இருந்து வருகின்றன.
தமிழகத்தில் காவிரிப் பிரச்சினை பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. கால நிலை மாற்றம், அதன் விளைவாகக் கடுமையான வெப்பம் ஆகியவற்றின் காரணமாக நீர்நிலைகள் வறண்டு போவதால் நீருக்கான கடுமையான நெருக்கடி ஏற்படலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக