வியாழன், 5 ஏப்ரல், 2018

தமிழக பல்கலைகழக துணை வேந்தர்களாக கர்நாடக ,ஆந்திரா ,கேரளத்தவர்கள் ... ஆர் எஸ் எஸ் பின்னணி உள்ளவர்கள் .

Sivasankaran Saravanan : சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா என்பவரை நியமித்த ஆளுநர் பன்வாரிலால் செயல் கண்டிக்கத்தக்கது!
ஏற்கெனவே இசைப்பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழகம் போன்றவற்றின் துணைவேந்தர்களாக ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட நபர்களை நியமித்த நிலையில் தற்போது தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளின் தலைமையிடமான அண்ணா பல்கலைக்கழகத்திலும் ஆளுநர் வரம்பு மீறியிருக்கிறார்!
தேர்வுக் குழு தேர்ந்தெடுத்த பட்டியலில் இல்லாதவர் இந்த சூரப்பா! சென்னை ஐஐடி பேராசிரியரும் உலகளவில் ஆயிரக்கணக்கான ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டவருமான தமிழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் இறுதிப்பட்டியலில் இடம்பெற்ற நிலையில் பட்டியலிலேயே இடம்பெறாத ஒரு நபரை ஆளுநர் துணைவேந்தராக நியமித்திருப்பது மாநில உரிமைகளுக்கெதிரான அடாவடியான செயல்! இதிலே பெருஞ்சோகம் என்னவென்றால், இதையெல்லாம் தட்டிக்கேட்கவேண்டிய எடப்பாடி அரசு, பன்வாரிலால் ன் கொத்தடிமை போல கைகட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்க்கிறது!
தமிழ்நாட்டின் உயர்கல்வி நிலையங்களில் வலதுசாரி இந்துத்துவ பின்னணி நபர்களை நியமிக்கிற செயல்களை அனுமதிப்பதன் மூலம் எடப்பாடி பழனிசாமியும் ஓ பன்னீர்செல்வமும், தமிழகம் இதுவரை கட்டிக்காத்த மாநில உரிமைகளை மத்திய அரசின் ஏஜென்ட்டிடம் அடகு வைக்கிற அவல நிலைக்கு மாநிலத்தை தள்ளியுள்ளனர்!

Shyamsundar - Oneindia Tamil  சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரான எம்.கே சூரப்பா நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். 
 எம்.கே சூரப்பா கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர். பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் இவர். 
இவர் அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக நியமன செய்யப்பட இருக்கிறார் என்று இரண்டு நாட்களுக்கு முன்பே தகவல்கள் கசிந்தது. இந்த நிலையில் தற்போது சூரப்பாவை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.  தமிழக பல்கலைக் கழகங்களில் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களை மட்டும் நியமிக்கும் பழக்கம் இப்போது திடீரென அதிகரித்துள்ளது.
இதற்கு முன்பு இப்படி அடுத்தடுத்து வெளிமாநிலத்தவர் திணிக்கப்பட்டதில்லை. சூரப்பா நியமனம் குறித்த தகவல் கசிந்த போதே தமிழக கல்வியாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும், ஏன் தகுதியான தமிழரே இல்லையா என்று கேட்டிருந்தார்.  ஆனால் இந்த புகார் எதையும் ஆளுநர் கண்டு கொள்ளவில்லை. தமிழக கல்வியாளர்களின் கொந்தளிப்பையும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் இந்த நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநரின் இந்த அறிவிப்பால் கல்வியாளர்கள் பேரதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். எம்.கே சூரப்பா 3 ஆண்டுகளுக்கு அண்ணா பல்கலை. துணை வேந்தராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக