வெள்ளி, 13 ஏப்ரல், 2018

உபி பலாத்கார வழக்கு:எம்.எல்.ஏ. குல்தீப்சிங்கை கைது செய்தது சி.பி.ஐ

உத்தர பிரதேசம், குல்தீப் சிங் சென்கர் , உன்னாவ் பலாத்கார வழக்கு, எம்எல்ஏ குல்தீப் சிங் ,பாரதிய ஜனதா எம்எல்ஏ குல்தீப் சிங் ,  உன்னாவ் மாஜிஸ்திரேட் கோர்ட்,  Unnao rape case, MLA Kuldeep Singh, Bharatiya Janata MLA Kuldeep Singh, Uttar Pradesh, Kuldeep Singh Sengar, Unnao Magistrates Court,தினமலர் :லக்னோ: உ.பி.,யில், பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள, பா.ஜ., - எம்.எல்.ஏ., குல்தீப் சிங் லக்னோவில் கைது செய்யப்பட்டுள்ளார்
உத்தர பிரதேசத்தில், பா.ஜ., - எம்.எல்.ஏ., குல்தீப் சிங் சென்கர் மற்றும் அவரது சகோதரர், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த, 18 வயது இளம் பெண், போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்ய மறுப்பதாக கூறி, முதல்வர் வீடு முன் தீக்குளிக்க முயன்றார். இந்த வழக்கு தொடர்பாக, எம்.எல்.ஏ.,வின் சகோதரர், போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். சிறப்பு விசாரணை குழுவினர், இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில், எம்.எல்.ஏ., குல்தீப் சிங்குக்கு எதிராக, போலீசார் நேற்று, வழக்குப் பதிவு செய்தனர். வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது.

அலகாபாத் ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் குல்தீப்பை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என ஐகோர்ட் கேள்வியெழுப்பியது. இந்நிலையில் இன்று காலை 4.30 மணியளவில் லக்னோவில் குல்தீப் சிங் அலுவலகமான ஹஸ்ரத்கஞ்ச் சென்ற சி.பி.ஐ.போலீசார். குல்தீப்சிங் சென்கரை கைது செய்தனார். அவர் மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று உன்னாவ் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக