ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் கமல் ... ரஜினிக்கு கூறியது இருக்கட்டும் முதலில் எனக்கு பதில் கூறுங்கள் ..

Let the Sterlite Plant Management answer-Kamal hemavandhana.- Oneindia Tamil சென்னை: ரஜினிக்கு பதில் சொன்ன ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தமக்கு பதில் சொல்லட்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் பதிலளித்துள்ளார்.
ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாகவும், நடிகர் ரஜினிகாந்த் தமது கருத்தை தெரிவித்திருந்தார். இதற்கு டுவிட்டர் மூலம் பதிலளித்த ஸ்டெர்லைட் நிர்வாகம், ஸ்டெர்லைட்டால் கேன்சர் வரும் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்றும், தங்களது நிறுவனத்தை பற்றி தவறான பொய்யான தகவல்கள் தரப்பட்டுள்ளதாகவும் நடிகர் ரஜினிகாந்திற்கு பதிலளித்திருந்தது.

இந்நிலையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திவரும் பொதுமக்களுக்கு நடிகர் கமலஹாசன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.
பின்னர் விமானம் மூலம் சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ரஜினிக்கு பதில் சொன்ன ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தமக்கு பதில் சொல்லட்டும் என்றார்.
மேலும், கமல், ரஜினி படங்களை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்ற வட்டாள் நாகராஜ் குறித்த கேள்விக்கு, அவர் விளையாடுவது போன்று தாம் விளையாட விரும்பவில்லை என்று கமல்ஹாசன் பதிலளித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக