செவ்வாய், 17 ஏப்ரல், 2018

ஆளுநர் புரோஹித் : பேரா.நிர்மலா விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை- ஊத்தி முடிடுவோம்ல?

மாலைமலர்: பேராசிரியை நிர்மலா தேவி ஆடியோ விவகாரத்தில் சிபிஐ விசாரணை
தேவையில்லை என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
 பேராசிரியை நிர்மலா தேவி ஆடியோ விவகாரம் தமிழகத்தில் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ராஜ்பவனில் இன்று மாலை 6 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக ஆளுநராக 6 மாதங்கள் பணியாற்றியுள்ளேன். தற்போது காமராஜர் யுனிவர்சிட்டி பேராசிரியை ஆடியோ விவகாரம் பெரிதாக பேசப்படுகிறது. இதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகம் என்னோடு கலந்து ஆலோசிக்காமல் விசாரணை கமிட்டி அமைத்துள்ளது. இந்த விவகாரம் குறித்து யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தமிழக மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். நிகழ்ச்சியின்போது சிலர் அங்கேயும் இங்கேயும் வருவதுண்டு. அதை வைத்து சம்மந்தம் படுத்தக்கூடாது. அந்த பெண்மணி என்னை தாத்தா போன்றவர் என்றுதான் கூறியுள்ளார். எனக்கு பேரன், கொள்ளுக்பேரன், பேத்திகள் உள்ளனர். கமிட்டியின் அறிக்கையை தொடர்ந்து நடவடிக்கை இருக்கும். சிபிஐ விசாரணை தேவையில்லை. தேவைப்பட்டால் அமைக்கப்படும்’’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக