சனி, 14 ஏப்ரல், 2018

குஜராத் இஷ்ரத் ஜகான் போலி என்கவுண்டருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர் சாலை விபத்தில் மரணம் (கொலை?)

Gopinath Pillai, the father of Pranesh Kumar alias Javed Sheikh who was killed along with Ishrat Jahan in an alleged encounter with Gujarat police in 2004, died on Friday after sustaining injuries in a road accident in Kerala’s Alappuzha district, police said
தினமலர் :ஆழப்புலா: குஜராத் ஆமதாபாத் அருகே, 2004ம் ஆண்டு, மும்பையைச் சேர்ந்த இஷ்ரத் ஜஹான் மற்றும் மூன்று முஸ்லிம் இளைஞர்கள், 'என்கவுன்டர்'
முறையில், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த, நான்கு பேரும், குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியைக் கொல்ல வந்தவர்கள் என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 'நடந்தது போலி என்கவுன்டர்; கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் அல்ல' என, தெரியவந்தது.
கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான், பிரனேஷ்குமார் என்ற ஜாவித் ஷேக், அம்ஜத் அலி, ஜிஸான் ஜோஹர் என்ற நான்கு பேர்களில் பிரனேஷ் குமாரின் தந்தை கோபிநாத் பிள்ளை, 77 நடந்தது போலி என்கவுன்டர் என கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இவர் நேற்று வயலார் செர்தாலா தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்த போது லாரி மோதியதில் கொச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியானார். நடந்தது விபத்தா அல்லது திட்டமிட்ட சதியா என விசாரணை நடக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக