செவ்வாய், 10 ஏப்ரல், 2018

BBC போராட்டக்களமாக மாறிய அண்ணாசாலை: போக்குவரத்து கடும் பாதிப்பு


சென்னையில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்தக்கூடாது என தமிழகத்தை சேர்ந்த பல தமிழ் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த போராட்டங்களால் அண்ணாசாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.>நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தலைமையில் மறியல் போராட்டமும், இன்னும் பல அமைப்புக்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மேலும், திரைப்பட இயக்குநர்களும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கும் இடையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது.
ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மத்திய அரசை வலியுறுத்தும் வகையில், இந்தப் போட்டி நடப்பதற்கு எதிராக போராட்டம் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து மாலை 4 மணிக்கே புறப்பட வேண்டிய கிரிக்கெட்  வீரர்கள் சற்று தாமத்தித்தே மைதானம் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
;இந்த மறியல் போராட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், "இன்று நீருக்காக போராடவில்லை என்றால், நாளை சோற்றுக்காக போராட வேண்டிய நிலை ஏற்படும்" என்று தெரிவித்திருக்கிறார்.

"விளையாட்டுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. ஆனால், காவிரி நீரின்றி என்ன நிலை ஏற்படும் என்ற உணர்வை இந்த விளையாட்டை பார்க்க வரும் ரசிகர்களுக்கு ஏற்படுத்தவே இந்தப் போராட்டம்" என்று சீமான் விளக்கம் அளித்துள்ளார்.
“இந்தப் போராட்டம் காவல்துறைக்கோ, விளையாட்டுக்கோ எதிரான போராட்டம் அல்ல. காவிரி பிரச்சனை தொடர்பான போராட்டம் என்று கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிததுள்ளார்.
இந்தப் போராட்டத்தில் கவிஞர் வைத்துமுத்து, இயக்குநர்கள் பாரதிராஜா, கெளதமன், வெற்றிமாறன் என பலர் கலந்து கொண்டனர்.
கட்சிக்கு அப்பாற்பட்ட பல இயக்கத்தினரும் சென்னையில் ஆங்காங்கு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக