சனி, 14 ஏப்ரல், 2018

BBC :காமன்வெல்த்: 10வது நாளில் தங்கப்பதக்கங்களை குவித்த இந்தியா... ஒரே நாளில் 7 தங்கங்கள் ..

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில்,
10ஆவது நாளான இன்று இந்தியர்கள் பல பதக்கங்களை குவித்துள்ளனர். இன்று ஒரே நாளில் மட்டும் 7 தங்கங்களை இந்தியா வென்றுள்ளது. பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டிகளில் மனிகா பத்ரா, சிங்கப்பூரை சேர்ந்த மென்க்யூவை வீழ்த்தி தங்கத்தை கைப்பற்றினார்.
முன்னதாக, பெண்களுக்கான மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் கனடாவை சேர்ந்த ஜெஸ்ஸிக்காவை வீழ்த்தி தங்கம் வென்றார் வினேஷ் போகாட். ஆண்களுக்கான மல்யுத்த பிரிவில் 125 கிலோ எடைப்பிரிவில் சுமித் மாலிக் தங்கத்தை கைப்பற்றியுள்ளார்.
20 வயதான நீரஜ் சோப்ரா, ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றார்.
முன்னதாக, இந்திய துத்தச்சண்டை வீரர் கவுரவ் சோலன்கி 52 கிலோ எடைப்பிரிவில் தங்கத்தை கைப்பற்றினார்.

ஆண்களுக்கான 50 மீட்டர் ரைஃபல் போட்டியில் சஞ்சீவ் ராஜ்புட் தங்கம் வென்றார்.< இந்திய குத்துச்சண்டை வீரர் மேரி கோம், தன்னை எதிர்த்து போட்டியிட்ட வட அயர்லாந்தை சேர்ந்த கிரிஸ்டினாவை வீழ்த்தி 48 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
குத்துச்சண்டை வீரர் அமித் பங்கல் 49 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
மொத்தம் 25 தங்கம், 14 வெள்ளி மற்றும் 18 வெண்கலங்கள் வென்ற இந்தியா, பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக