திங்கள், 2 ஏப்ரல், 2018

ஆ.ராசா ,,, ஒரு வேங்கையின் மைந்தன்தான் ... ஒத்தல நின்ன ஒரிஜினல் வேங்கமகன்! Aap Ki Adalat flashback


Rajan Radhamanalan : ஆ.ராசாவின் சமீபத்திய நேர்காணல்கள் விதந்தோதப்படுகின்றன. இன்றைக்கு ஆ.ராசா நீதிமன்றத்தில் வென்று வந்தவர்; அதுபோக தமிழ் ஊடகவியலாளர்களுக்கு திமுக பிரமுகர்கள் என்றால் இயல்பாகவே கொஞ்சம் தொடை நடுங்கும். ஆனால் 4 வருடங்களுக்கு முன்பு இந்தி சேனல் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சி இது.
விசாரணை செய்பவன் ரஜத் “ஷர்மா” நீதிபதியாக "ராஜகோபாலன்” ஆடியன்ஸ் முழுக்க முன்கற்பிதத்துடன் அமர்ந்திருக்கும் வடக்கத்திய பாமரர்கள். எப்பேர்ப்பட்ட அவதூறுகளை நேரடியாகச் சுமத்தினாலும் யாரும் மறுக்கப்போவதில்லை. அரங்கினுள்ளேயும் வெளியேயும் அதுதான் நிலைமை.
தீர்ப்பு வராத நிலையில், திமுக ஆதரவாளர்களே ஆ ராசாவை முழுவதும் நம்ப இயலாத அந்தச் சூழலில், சிபிஐ,அமலாக்கத்துறை, உச்சநீதிமன்றம், சிஏஜி உட்பட நாடே ஆ.ராசாவுக்கு எதிர்மனநிலையில் இருக்க... ஒற்றை ஆளாய் அமர்ந்திருக்கிறார் அந்த நபர்.
உதாரணத்திற்கு அந்த ஸ்டூடியோ அமைப்பைப் பாருங்களேன். அதிலிருக்கும் கூண்டில் வந்து அந்த நேரத்தில் அமர்வதற்கு எத்தனை தைரியமும், என்றைக்கிருந்தாலும் இந்த வழக்கில் நாம் நிச்சயம் வெல்வோம் என்ற தன்னம்பிக்கையும் இருந்திருக்க வேண்டும்?

ஒருவேளை அங்கு ஆ ராசா குற்றஞ்சாட்டிய அமைப்புகளுக்கு எதிராக உச்சஸ்தாயியில் எதுவும் பேசினால் அதுவே கூட மத்திய அரசையும், வழக்கை விசாரிக்கும் டிரையல் கோர்ட்டையும் எரிச்சலூட்டும் வாய்ப்புமிருந்தது. அவையனைத்தையும் தாண்டி ஆ ராசா அங்கே ஒரு மணி நேரம் வாதாடியிருக்கிறார். கூட்டணி உறவு தவிர்த்து மற்றைய அத்தனை கேள்விகளுக்கும் நேரிடையான பதில்கள்! கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் இந்தியில்.. 90% கேள்விகள் ராசாவைச் சீண்டும் நோக்கில் பார்வையாளர்களிடம் கைதட்டல் பெறுவதற்காகவே கேட்கப்படுகின்றன.
தொகுப்பாளர் கேள்வியைக் கேட்ட அடுத்த நொடி, ஆ ராசா பதிலிறுக்கும் முன்னமே ஒவ்வொரு முறையும் கைதட்டும் வடக்கத்தியர்கள், இந்தி புரியாமலும், உடைந்த ஆங்கிலத்தாலும் ராசாவுக்கு ஓரிரு இடங்களில் சற்று வார்த்தைகள் குளறும்போது ஓவென்று சத்தமிடுகின்றனர்.
ஆச்சரியப்படத்தக்க வகையில் நிகழ்ச்சி முடியும் தறுவாயில் கொஞ்சம் கொஞ்சமாக ராசா பார்வையாளர்களைக் கன்வின்ஸ் செய்கிறார். யோசித்துப் பாருங்கள் எந்த ஊழல் குற்றவாளி பொது forum இல் வந்து இப்படி அமர்ந்து பதில் சொல்வான்? என்ன தேவை இருக்கிறது மீடியா முன்பு வந்து சிதையில் இறங்க வேண்டுமென்று? So called Iron lady ஜெயாவுக்கு இந்த வக்கு இருந்திருக்கிறதா? ஆனால் உண்மையிலேயே நெருப்பாற்றில் நீந்தி வந்திருக்கிறார் ராசா.
கட்சியா தனி நபரா என கணக்குப் போட்டு ராசாவை பலிகொடுத்திருக்க திமுகவுக்கு எத்தனையோ நியாயங்கள் இருக்கலாம். நாட்டில் இருக்கும் எந்தக் கட்சியும் அதைத்தான் செய்திருக்கும். ஆனால் கலைஞர் அதைச் செய்யவில்லை. தகத்தகாய சூரியனே என்றார்.
அன்றைக்கு கலைஞர் தேவையில்லாமல் தலித் கார்டை உபயோகிக்கிறார் என்று நானும் கருதியதுண்டு. அதற்காக இப்போது உள்ளபடியே வருத்தப்படுகிறேன்.
And., ஆ.ராசா you beaut

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக