சனி, 21 ஏப்ரல், 2018

போக்கிடம் இல்லாமல் 9 நாட்கள் கடலிலேயே 8 குழந்தைகள் உட்பட 76 ரோஹிங்கிய முஸ்லிம்கள் ..

tamilthehindu :மியான்மர் அடக்கு முறையிலிருந்து தப்பி படகில் ஏறி கடலில் 9 நாட்கள் தத்தளித்த 8 குழந்தைகள் அடங்கிய 76 ரோஹிங்கிய முஸ்லிம்கள் சுமத்திராவில் ஒருவழியாக கரை சேர்ந்தனர்.
8 குழந்தைகள், 25 பெண்கள், 43 ஆண்கள் வெள்ளி மதியம் அசேவில் உள்ள பைரூயன் தீவுக்கு கரைசேர்ந்தனர். கடலிலேயே 9 நாட்கள் தத்தளித்ததால் இதில் பலருக்கும் உடலில் நீரின் அளவு குறைந்து உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் உணவின்றி தவித்துள்ளனர். இவர்களுக்கு உடலில் தண்ணீர் வறட்சி ஏற்பட்டுள்ளது, கடுமையாகக் களைப்படைந்துள்ளனர் என்பதால் தேவையான மருத்துவ வசதிகளை இந்தோனேசியா செய்து கொடுத்துள்ளது.
மியான்மரின் கொடூரமான இனமையப் போர் நடக்கும் ராக்கைனிலிருந்து தலைக்கு 150 டாலர்கள் கொடுத்து படகைப் பிடித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் முதல் இதுவரை 7 லட்சம் ரோஹிங்கிய முஸ்லிம்கள் அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

படம். | ராய்ட்டர்ஸ்
 இவர்கள் மலேசியாவுக்குத்தான் செல்வதாக இருந்தது, ஆனால் இந்தோனேசியாவுக்கு வந்துள்ளனர்.
சமூக நலக்குழு ஒன்று இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து உணவு, இருப்பிடம் வழங்கியுள்ளது. பவுத்த ஆதிக்க மியான்மரில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் சிறுபான்மையினர் ஆவார்கள். குடியுரிமை மறுக்கப்பட்ட இவர்களுக்கு கடுமையாக கொடுமைகள் இழைக்கப்பட்டு வருகின்றன.
மியான்மரிலேயே அகதிகளாக்கப்பட்டு இவர்கள் அடையாள அட்டைகள் பறிக்கப்பட்டுள்ளன, அங்கு இவர்களுக்கு வாழ்வாதாரம் என்பதே இல்லை. முகாம்களில் குழந்தைகளுக்குக் கூட போதிய உணவுகளை மியான்மர் வழங்குவதில்லை. இந்நிலையில்தான் அங்கிருந்து பலரும் உயிரைப் பணயம் வைத்து கடல் மார்க்கமாக வங்கதேசம், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாக பெரும்திரளில் வருகின்றனர்.
இந்நிலையில் வெள்ளியன்று வந்த 76 பேர்களுக்கும் உதவ பன்னாட்டு புலம்பெயர்வோர் அமைப்பு ஒரு குழுவை இந்தோனேசியா அனுப்பியது.

1 கருத்து:

  1. பௌத்த தீவிரவாதம். வெளியே சாது வேஷம் உள்ளே கொலைவெறி தனம். இதுதான் பௌத்தம்.

    பதிலளிநீக்கு