வெள்ளி, 20 ஏப்ரல், 2018

திருமண ஊர்வலத்தை வேடிக்கை பார்க்க சென்ற 6 வயது சிறுமி பலாத்காரம் உத்தர பிரதேசத்தில் மீண்டும் ...

லக்னோ: உத்தர பிரதேசத்தில் திருமண ஊர்வலத்தை வேடிக்கை பார்க்க சென்ற 6 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள செம்ஹ பஜ்ஹா கிராமத்தில் இருக்கும் சித்தார்த்நகர் பகுதியை சேர்ந்த சிறுமி புதன்கிழமை இரவு திருமண ஊர்வலத்தை பார்க்க வெளியே சென்றுள்ளார். 
ஊர்வலம் அவர்களின் வீட்டை கடந்து சென்றும் சிறுமி வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. உடனே சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்தார். அப்பகுதியை சேர்ந்த ஜிதேந்திர யாதவ்(28) என்பவர் சிறுமியை தோட்டத்திற்கு தூக்கிச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி மயங்கிய நிலையில் ரத்தப் போக்குடன் தோட்டத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். உத்தர பிரதேசத்தில் பெற்ற மகளையே தந்தை தனது நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்த பரபரப்பு அடங்கும் முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக