504, 505 (1) (c), 509, Section 4 of TN Prohibition of Women Harassment Actமாலைமலர் :சென்னை: நடிகரும் பாஜக நிர்வாகியுமான எஸ்வி சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அநாகரீக கருத்து ஒன்றை பகிர்ந்திருந்தார். இதற்கு அனைத்து தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து தனது பதிவை நீக்கிய அவர் மன்னிப்பு கோரினார். எஸ்வி சேகர் மன்னிப்பு கேட்டாலும், கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இதற்கிடையே பத்திரிகையாளர்கள் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். இந்நிலையில் பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச் சங்கம் எஸ்வி சேகர் மீது புகார் அளித்துள்ளது. இந்த புகார் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் எஸ்வி சேகர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக