செவ்வாய், 17 ஏப்ரல், 2018

பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஏப்ரல் 28 வரை நீதிமன்றக் காவல்- பல பெண்களின் படங்கள் 3 செல்போன்களில் இருந்தன சந்தேகம் வலுக்கிறது ?

பேராசிரியர் நிர்மலா தேவி சொக்கலிங்கபுரத்தை பூர்வீகமாக கொண்ட நிர்மலா தேவியின் பெற்றோர்கள் இருவரும் ஆசிரியர்கள் ஆவர். அவர் அருப்புகோட்டையில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். அதன்பின் மதுரை பல்கலைகழகத்தில் மேற்படிப்பு முடித்தார். (எம்.ஏ. எம்.பில். பி.ஹெச்.டி) கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்ற அவர் கடந்த 2008ம் ஆண்டு உதவி பேராசிரியையாக பணியில் சேர்ந்தார். இவரின் கணவர் நகராட்சியில் ஒப்பந்ததாரராக பணிபுரிந்தவர். 2 வருடங்களுக்கு முன்பு நிர்மலா தேவி விவாகரத்து செய்தார். நிர்மலா தேவியின் இரு மகள்களும் கணவரின் பராமரிப்பில் வாழ்ந்து வருகின்றனர்.
அவரிடம் இருந்த 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த செல்போன்களில் பல பெண்களின் புகைப்படங்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும், பல உயர் அதிகாரிகளின் செல்போன் எண்கள் அதில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் யார் யாருடன் தொடர்பில் இருந்தார்? யாரிடமெல்லாம் அதிகம் பேசியிருக்கிறார்? அவருக்கு வந்த எஸ்.எம்.எஸ், வாட்ஸ்-அப் தகவல்கள் என அனைத்தையும் சேகரிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். நிர்மலா தேவியின் செல்போனில் இருக்கும் பெண்கள், அவரால் சீரழிக்கப்பட்ட கல்லூரி மாணவிகளாக இருப்பார்களோ என்கிற அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மாலைமலர்: மாணவிகளுக்கு பாலியல் அழைப்பு விடுத்ததாக கைது செய்யப்பட்ட
பேராசிரியை நிர்மலா தேவியை 28-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவு இடப்பட்டுள்ளது.
பேராசிரியை நிர்மலாதேவி, தன்னிடம் படிக்கும் மாணவிகள் 4 பேரிடம் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்கு பாலியல் ரீதியாக ஒத்துழைப்பு தரும்படி போனில் அழைப்பு விடுத்த ஆடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக கூறி போராட்டம் நடைபெற்றது. பின்னர் இவ்விவகாரம் கல்லூரி நிர்வாகம் சார்பில் அளித்த புகாரின் அடிப்படையில், நிர்மலா தேவியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

இதுதவிர, ஓங்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணைக் குழுவை ஆளுநர் அமைத்துள்ளார். இந்நிலையில், கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி இன்று மாலை விருதுநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மும்தாஜ் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஏப்ரல் 28-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அவரை மதுரை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக