வெள்ளி, 6 ஏப்ரல், 2018

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 தொழிலாளிகள் உயிரழப்பு

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 தொழிலாளிகள் உடல் கருகி பலிமாலைமலர் :முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பிக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். சிவகாசி: சிவகாசியைச் சேர்ந்தவர் ஹரிச்சந்திரன். இவர் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பி ஆவார். இவருக்கு சொந்த மான பட்டாசு ஆலை சிவகாசி அருகே உள்ள ராமுத்தேவன்பட்டியில் உள்ளது. இங்கு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர்.
இன்று காலை தரைச் சக்கரத்திற்கு மருந்து கலவை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
அப்போது எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறை இடிந்து தரைமட்டமானது. அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 2 தொழிலாளர்கள் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அவர்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

வெடி விபத்தில் லட்சுமியாபுரத்தைச் சேர்ந்த குமார் (வயது 34), சேகர் (35), இருளப்பன் நகரைச் சேர்ந்த பழனிச்சாமி ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் வெம்பக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வெம்பக்கோட்டை தாசில்தார் ராஜ்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக