வியாழன், 26 ஏப்ரல், 2018

புனே .. "பீம் கோரேகாவ்" தாக்குதலின் சாட்சி சிறுமி பூஜா சகட் (19 வயது) இன் உடல் கிணற்றில்


1.01.2018 அன்று 100 வாகனங்கள் மற்றும் 60 வீடுகளை கொளுத்தி
சேதப்படுத்தினார்கள் ஆதிக்க சாதியவெறியர்கள்.
அவர்களின் கோபத்துக்கு காரணம் அன்று பட்டியலின மக்கள் தங்களின் எழுச்சி அடையாளமான பீம் கோரேகாவ் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யும் விதத்தில் பேரணி "பீம் கோரேகாவ்" 200ஆம் ஆண்டு தன் எழுச்சி பேரணி நடத்தினார்கள்.
அந்த எழுச்சி.... ஆதிக்க சாதியவெறியர்களாலும், இந்து அடிப்படை வெறியர்களாலும் பொறுத்து கொள்ளமுடியாமல் நடந்த தாக்குதல் தான் 1.01.2018 அன்று 100 வாகனங்கள் மற்றும் 60 வீடுகளை கொளுத்தி சேதப்படுத்தியது.
அந்த தாக்குதலை நேரில் பார்த்த பூஜா சகட் என்ற 19 வயது சிறுமி(பீம் கோரேகாவ், புனே) கடந்த சனிக்கிழமை மதியம் 1.30 மணியளவில் காணாமல் போக அன்று மாலையே அந்த பகுதியில்(அவர் இருக்கும் பகுதியில் இருந்து 2 km தூரத்தில்) இருக்கும் ஒரு கிணற்றில் பிணமாக கிடைந்துள்ளார்.
1.1.18 அன்று நடந்த பட்டியலின மக்களுக்கு எதிரான தாக்குதலில் தன் குடும்பம் இழந்த வீட்டுக்காகவும் அவர்களின் வாழ்வாதாரமான உணவு விடுதிகாகவும் அரசிடம் நீதி கேட்கும் போராட்டத்தில் அந்த சிறுமி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பீம் கோரேகாவ் 200ஆம் ஆண்டு தன் எழுச்சிக்கான அடையாளத்தை அழிக்க நினைத்தார்கள் .... தாக்குதல் நடத்தினார்கள்...
சூழ்ச்சியை மறைக்க நினைத்தார்கள் கண்ணால் பார்த்த சாட்சியை கொன்றார்கள்.
இந்த சம்பவம் இந்தியாவில் எங்கோ ஒரு மூலையில் நடந்து இருக்கலாம்
ஆனால் அதன் உள்நோக்கம், பட்டியலின(sc/st) மக்களுக்கு எதிராக நடக்கும் அனைத்து தாக்குதலுக்கும் பொருந்தும்.
இங்கு சாதியவெறியர்களாலும், இந்து அடிப்படைவெறியர்களாலும் பொறுத்துக்கொள்ள முடியாமல் இருப்பது ஒன்றுதான்
" பட்டியலின(sc/st) மக்கள் தன்னெழுச்சியால் பலம் அடைவது"
நாம் என்ன ஆயுதம் எடுக்கவேண்டும் என்பதை நம் எதிரிகளே அடையாளம் காட்டுகிறார்கள்.
அண்ணல் அம்பேத்கர் பணி முடிப்போம்💪
அண்ணலியம் வெல்லட்டும் 💪
ஜெய்பீம்.
Puduvai Mathivathanan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக