புதன், 18 ஏப்ரல், 2018

திரையரங்குகளில் ரு.150-க்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யப்படாது

கடந்த 47 நாட்களாகத் தமிழ்த் திரையுலகில் எந்த புதுப்படமும் வெளியாகாதது மட்டுமன்றி, எந்தவிதப் பணியும் நடக்கவில்லை. கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டு, வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது.
திரையரங்குகளில் ரு.150-க்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யப்படாது என நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.  - விஷால் சென்னை: சென்னையில் இன்று நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- திரையுலகினரின் வேலைநிறுத்தத்திற்கு பிறகு முதலாவதாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான மெர்க்குரி படம் இந்த வாரம் வெளியாகும்.

தமிழ் திரைத்துறை ஜூன் முதல் முழுமையாக கணினிமயமாக்கப்படும். சினிமா டிக்கெட் விற்பனை இணையதளத்தை தயாரிப்பாளர் சங்கமே விரைவில் தொடங்க உள்ளது.
ஏப்ரல் 20-ம் தேதி முதல் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்படும். காலா திரைப்பட வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அறிவிப்பார்கள் இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக