செவ்வாய், 3 ஏப்ரல், 2018

சீனா அமெரிகாவுக்கு பதிலடி 128 அமெரிக்க பொருட்களுக்கு 15 வீத கூடுதல் வரி ..

மாலைமலர் :அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்கள் மற்றும் அது தொடர்பான 120 பொருட்களின் மீது 15 சதவீத கூடுதல் வரியும், பன்றி இறைச்சி மற்றும் அது தொடர்பான 8 பொருட்களுக்கு 25 சதவீத கூடுதல் வரியும் விதிக்கப்பட்டது. பீஜிங்: தனது நாட்டின் அறிவுசார் சொத்துகளை திட்டமிட்டு திருடி வருவதாக சீனா மீது அமெரிக்கா குற்றம்சாட்டியது. ஆனால் இதை சீனா மறுத்தது. எனினும் இதை ஏற்காத அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் அலுமினியத்தின் மீது 15 சதவீதம் முதல் 25 சதவீத கூடுதல் வரியை விதித்தார். மேலும் சீனாவின் முதலீடுகளுக்கு கடினமாக கட்டுப்பாடுகளையும் அமெரிக்கா விதித்தது. இதனால் அமெரிக்காவுக்கு, ஏற்றுமதி செய்யும் 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள்(ரூ.3 லட்சத்து 90 ஆயிரம் கோடி) மதிப்பிலான பொருட்களுக்கு கணிசமான வரியை செலுத்தவேண்டிய கட்டாயம் சீனாவுக்கு உருவானது. இதற்கு பதிலடி கொடுக்க சீனாவும் முடிவு செய்தது.

அந்த வகையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்கள் மற்றும் அது தொடர்பான 120 பொருட்களின் மீது 15 சதவீத கூடுதல் வரியும், பன்றி இறைச்சி மற்றும் அது தொடர்பான 8 பொருட்களுக்கு 25 சதவீத கூடுதல் வரியும் விதிக்கப்பட்டது. இந்த வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வந்தது.

இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று வெளியிட்ட சீன வர்த்தக அமைச்சகம் நாங்கள் உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைப்படி இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறோம் என்று தெரிவித்தது. சீனாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் 3 பில்லியன் டாலர்கள் அளவிற்கு அமெரிக்காவுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக