சனி, 17 மார்ச், 2018

இன்றைய வடக்கு தெற்கு பிரச்னையை அன்றே கணித்த அண்ணல் அம்பேத்கார்

Sivasankaran Saravanan : இந்திய தேசத்தின் மிகப்பெரிய பொருளாதார மேதை அவர்!
1930 களின் ஆரம்பத்திலேயே பிரிட்டிஷ் அரசு இந்தியாவிற்கு சுதந்திரம் தர முடிவெடுத்துவிட்டது! அதன்பிறகு நடந்ததெல்லாம் சும்மா அதிகாரப்பகிர்வுகளே!
அந்த காலகட்டத்தில் இந்தியத்துணைக்கண்டத்தின் பரந்து விரிந்த நிலப்பரப்பையும் அதன் சூழலியல் தன்மையையும் நன்கு ஆய்ந்து உணர்ந்த அந்த அறிஞர் தனக்கிருக்கும் பொருளாதார அறிவை பயன்படுத்தி ஆழமாக சிந்திக்கிறார்!
ஒருவேளை இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கப்பட்டால் அதன்பிறகு ஒரே ரூபாய் மதிப்பை வைத்து ஒட்டுமொத்த தேசத்தையும் இவர்கள் ஒருங்கிணைப்பார்கள் என்பதை கண்டறிகிறார்!
விந்திய மலைத்தொடருக்கு வடக்கே ஒரு இந்தியாவையும் தெற்கே ஒரு இந்தியாவையும் அவர் காண்கிறார். ரூபாய் மதிப்பெண்பது இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாக இருக்காது என்பதை துல்லியமாக கணிக்கிறார் அந்த பொருளாதார மேதை!
எப்படியும் சுதந்திரத்திற்கு பிறகு இவர்கள் ஒரே ரூபாய் மதிப்பை வைத்துத்தான் ஒட்டவைக்கப் பார்ப்பார்கள். விவசாயம் தான் பிரதான வருமானம், நாட்டின் ஜிடிபி விவசாயத்தை மட்டுமே முன்னிறுத்தி இருக்கும் என்ற நிலை இருக்கும்வரை, விந்திய மலைத்தொடருக்கு வடக்கே உள்ள பகுதிகள் விந்திய மலைகளுக்கு தெற்கே உள்ள இந்தியாவை ஏமாற்றி பிழைப்பை ஓட்டும் என கணிக்கிறார்!

விவசாயம் முடிவுக்கு வந்து தொழிற்புரட்சி ஏற்பட்டு உற்பத்தி மற்றும் சேவைத்துறைகள் தான் பொருளாதாரத்தை நிர்ணயிக்கிற சக்தியாக உருமாறும்போது விந்திய மலைகளுக்கு தெற்கே உள்ள இந்தியா பொருளாதார ரீதியாக வளப்படும் என கணிக்கிறார். அத்தோடு நில்லாமல் விந்திய மலைம்தொடருக்கு தெற்கே உள்ள இந்தியாவின் வருமானத்தை எடுத்துத்தான் வடக்கே உள்ள இந்தியாவை நிர்வகிக்கமுடியும் என்பதையும், அப்போது கண்டிப்பாக வடக்கு தெற்கு பிரச்சினை உருவாகி இந்தியா சிதறும் வாய்ப்பு இருப்பதாக தனது பொருளாதார ஆய்வுக்கட்டுரையை நிறைவு செய்கிறார் அந்த பொருளாதார மேதை!
விந்திய மலைத்தொடர்க்கு தெற்கே உள்ள இந்தியா என்பது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட தென்னிந்தியா! வடக்கே இருப்பது வட இந்தியா!
இந்த பொருளாதார ஆய்வை ஏறக்குறைய நூறு வருடங்களுக்கு முன்பே முன்வைத்த மேதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கார்!
அம்பேத்கார் ஒரு சட்ட மேதை என்பது பலருக்கும் தெரியும் என்றாலும் அண்ணல் அடிப்படையில் பொருளாதார நிபுணர்!
அம்பேத்காரின் இந்த ஆய்வுக்கட்டுரையை கூகுளில் தேடிப்படிக்கலாம்! சிரத்தை எடுத்து படித்துத் தெரிந்துகொள்ளவேண்டிய ஒரு ஆய்வினை, ஏதோ என்னால் முடிந்தளவிற்கு எளிமைப்படுத்தி சுருக்கமாக தந்துள்ளேன்! விரிவான தகவலுக்கு இணையத்தை நாடவும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக