வெள்ளி, 16 மார்ச், 2018

அதிமுகவில் இருந்து கே சி பழனிசாமி நீக்கம் ... மோடி அரசுக்கு எதிராக எதிரான கருத்து ... எடப்பாடிக்கு மோடி நெருக்கடி

மத்திய அரசுக்கு எதிராக ஆந்திரா எம்பிக்கள் கொண்டுவரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவாக அதிமுக எம்பிக்கள் வாக்களிப்பர் என்று தொலைக்காட்சியில் கூறியது மோடி அரசை அதிர்ச்சி உள்ளாக்கியதாக தெரிகிறது !
வெப்துனியா :மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசின் பொம்மையாகவும், பினாமியாகவும் தமிழக அரசு செயல்பட்டு கொண்டிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் கடந்த ஒரு வருடமாக இருந்து வருகிறது. அதற்கேற்ப அதிமுக அமைச்சர்களின் பேச்சுக்களும் நடவடிக்கைகளும் இருந்தாதால் பொதுமக்களுக்கும் இந்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வரப்போவதாக ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார். இந்த தீர்மானத்தை தேவைப்பட்டால் ஆதரிப்போம் என்று தெலுங்கு தேசம் மற்றும் ராஷ்டிர ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூறியுள்ளது. இந்த நிலையில் பாஜகவின் தலையாட்டும் பொம்மை என்று விமர்சனம் செய்யப்பட்ட அதிமுகவும் தேவைப்பட்டால் இந்த தீர்மானத்தை ஆதரிக்கும் என்று முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி கூறியுள்ளது பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கும்' என்று கூறியுள்ளார். இதனால் அதிமுக, பாஜகவினர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக