புதன், 28 மார்ச், 2018

பிரதமர் மோடியை அயோக்கியன் என்று ஈரோட்டு மாநாட்டில் தமிழன் பிரசன்னா....

தமிழன் பிரசன்னாவின் தொலைபேசி இலக்கத்தை எச் ராஜா தனது ட்வீட்டரில் வெளியிட்டு அர்ச்சனை செய்யுமாறு வேண்டிகொண்டார் . அதன் காரணமாக ஏராளமான சங்கிகள் பிரசன்னாவுக்கு கொலை மிரட்டல்கள் விடுவதாக தெரிகிறது
Don Ashok : திமுக மேடையில் தமிழன் பிரசன்னா மோடியை அயோக்கியன்
எனச் சொன்னபோது எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. என்ன இருந்தாலும் பிரதமர் இல்லையா? ஆனால் நாம் சில விஷயங்களை எண்ணிப்பார்க்க வேண்டும்.
1) நாட்டுக்கு பெரும் பொருள் சேதமும், நூற்றுக்கணக்கான ஏழைகளின் உயிர் சேதமும் விளைவித்த டீமானடைசேஷனை கொண்டு வந்துவிட்டு, அது வேலை செய்யவில்லை என்றால் 50 நாளில் என்னை உயிரோடு கொளுத்துங்கள் என்றார். 500நாள் ஆகிவிட்டது. ஒரு மன்னிப்பு கூட கேட்கவில்லை.
2) ஜி.எஸ்.டி கொள்ளை பத்தாதென்று வங்கி கட்டணங்களை கண்டபடி ஏற்றியாகிவிட்டது. அதாவது நம் கழுத்தில் கத்தி வைத்து பணத்தை வங்கியில் போட வைத்து, பின்னர் ஒவ்வொரு ட்ரான்சாக்‌ஷனுக்கும் கட்டணம். அதுவும் அநியாயத்திற்கு. ராபின்ஹூட்டுக்கு oppossite நரேந்திர மோடி. ஏழை, நடுத்தர மக்களிடம் பிடிங்கி பணக்காரர்களிடம் கொடுப்பதென்றால் அந்த ஆளுக்கு அல்வா சாப்பிடுவதைப் போல.
3) வேலை வாய்ப்புகளை உருவாக்க வக்கில்லை. இருந்த வேலை வாய்ப்புகளிலும், மோடியின் நிர்வாக சீர்கேட்டினால் 10லட்சம் வேலைகள் போயுள்ளன. பக்கோடா விற்றுக்கொள்ளுங்கள் என அறிவுரை வேறு!!
4) ‎அறிவியல் மாநாடுகளில் எல்லாம் போய் பைத்தியம் போல உளறவேண்டியது. பிள்ளையாருக்கு ப்ளாஸ்டிக் சர்ஜரி, 15000 ஆண்டுக்கு முன்பே விமானம் என்று. இந்தியர்கள் காட்டுமிராண்டிகள் என்கிற பொதுபிம்பம் கடந்த சில பத்தாண்டுகளாகத்தான் உடையத் துவங்கியுள்ளது.
மோடி அதை உயிர்ப்பித்திருக்கிறார். இது பத்தாதென்று ஆயுஷ் போன்ற பெயர்களில் அரசே செயல்படாத மருந்துகளை விற்று உயிர்களைக் காவு வாங்கும் அவலமும் இங்கேதான் நடக்கிறது.
5) ‎காங்கிரஸ் பல்லாண்டுகள் ஆட்சியில் இருந்து சம்பாரிக்காததை மோடி அரசு சில ஆண்டுகளிலேயே அதானிகளிடமும், அம்பானிகளிடமும் 'நன்கொடையாக' சம்பாதித்து காங்கிரசை விட பணக்கார கட்சி ஆகியிருக்கிறது. பதஞ்சலி எனும் டுபாகூர் கம்பனி ஓவர்நைட்டில் பணக்கார கம்பனி ஆனதைப் போல.
6) ‎ட்ரம்ப் ஜனாதிபதி ஆனதும் அமெரிக்காவில் இனவெறி தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. இங்கே மோடி பிரதமர் ஆனபின் மாட்டுக்கறி கொலை சம்பவங்களும், முற்போக்காளர்கள் கொலை சம்பவமும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. தெருவில் போகும் ஒரு மதவெறி/இனவெறி பொறுக்கி அதை செயல்படுத்துவதற்கான தைரியத்தை உச்சத்தில் இருக்கும் தன் தலைமையிடமிருந்தே பெறுகிறான்.
7) ‎இதெல்லாவற்றையும் விட பெட்ரோல், டீசல் விலை. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது 1ரூ ஏற்றினாலே அய்யோ அய்யோ என மோடி குதித்த ட்வீட்கள் இன்னமும் அப்படியே இருக்கிறது. ஆனால் இன்று உலக அளவில் கச்சா எண்ணை விலை சரிந்தும் இந்தியாவில் அன்றாடம் பெட்ரோல் விலை ஏற்றும் அநீதி நடக்கிறது. வீட்டு சிலிண்டர் விலை இரண்டு மடங்கு ஏறி உள்ளது.
8. நீட், மொழித்திணிப்பு, மாநில உரிமைகளை சூறையாடுவது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச்சொன்னால் மேற்பார்வை வாரியம் அமைக்கும் திமிர், என எந்த இடத்தைதான் விட்டுவைத்திருக்கிறது இந்த அரசு?
இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். இந்தியாவில் எத்தனையோ அரசுகள் மாறியுள்ளன. ஆனால் மோடி அரசைப் போன்ற முட்டாள்த்தனமான, குரூரத்தனமான, சைக்கோத்தனமான ஆட்சி வரலாற்றில் இல்லை.
ஏழைகளின் பாக்கெட்டுகளில் ஒட்டியிருக்கும் சில்லறைகளைக் கூட பிடிங்கி பணக்காரர்களின் தொந்தியில் வறட்டியைப் போல ஒட்டிவைத்து அழகு பார்ப்பதைவிட ஒரு அயோக்கியத்தனம் என்ன இருக்க முடியும்? இது ஒன்றைதானே இந்த அரசு தனது ஒரே கொள்கையாக வைத்திருக்கிறது. நாம் மோடியை மட்டுமல்ல, கண்முன்னால் ஆதாரங்கள், புள்ளிவிவரங்களோடு இவ்வளவு அநியாயம் நடக்கும்போதுகூட இன்னமும் மோடியை ஆதரிக்கும் ஒவ்வொருவரையும் நாம் தாராளமாக அயோக்கியர்கள் என அழைக்கலாம். நாடி நரம்பு ரத்தம் சதை புத்தி என எல்லாவற்றிலும் அயோக்கியத்தனம் ஊறிப்போன அயோக்கியர்களை வேறெப்படி அழைப்பது!!!
-அசோக்.R

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக