புதன், 7 மார்ச், 2018

புகார்கள் கவனிக்காததால் லோக் ஆயுக்தா நீதிபதியை குத்திய மனுதாரர்

Shyamsundar - Oneindia Tamil பெங்களூர்: தான் வழங்கிய புகார்கள் எதிலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் லோக்ஆயுக்தா நீதிபதி விஸ்வநாத் ஷெட்டியை கத்தியால் குத்தியதாக குற்றவாளி வாக்குமூலம் அளித்து இருக்கிறார். லோக்ஆயுக்தா அலுவலகத்தில் லோக்ஆயுக்தா நீதிபதி விஸ்வநாத் ஷெட்டி வழக்கு ஒன்று தொடர்பாக விசாரித்துக்கொண்டிருந்தபோது, தேஜராஜ் ஷர்மா என்பவரால் கத்தியால் குத்தப்பட்டார். அவரது உடலில் மூன்றிற்கும் அதிகமான இடங்களில் கத்தி குத்து இருந்துள்ளது.காயமடைந்த விஸ்வநாத் ஷெட்டி, அருகேயுள்ள மல்லையா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு வயிறு, நெஞ்சு பகுதி மற்றும் இடது கை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இந்த குற்றத்தை செய்த தேஜராஜ் ஷர்மா உடனடியாக கைது செய்யப்பட்டார். போலீஸ் அவரை கடந்த நான்கு மணி நேரமாக விசாரித்ததில் முக்கிய தகவல்கள் கிடைத்து இருக்கிறது. தேஜராஜ் ஷர்மா ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். 
 
இவர் கர்நாடகாவில் பல வருடங்களுக்கு முன்பாகவே குடிபெயர்ந்து இருக்கிறார். இவர் அங்கு ஐயூர்க்கும் தமுக்குரில் பர்னிச்சர் கடை வைத்துள்ளார். அரசு அலுவலகங்களுக்கு பர்னிச்சர் அனுப்பும் ஒப்பந்தத்திற்கு இவரிடம் அதிகாரிங்கள் லஞ்சம் கேட்டு இருக்கிறார்கள். இதுகுறித்து இவர் லோக்ஆயுக்தா அலுவலகத்தில் புகார் அளித்து இருக்கிறார். ஆனால் பல வாரங்களாக இதில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
 
இந்த நிலையில் லோக்ஆயுக்தா நீதிபதி விஸ்வநாத் ஷெட்டியை பார்க்க காலையிலேயே அனுமதி வாங்கி இருக்கிறார். அப்போதுதான் அவர் உள்ளே சென்றவுடன் கத்தியால் குத்தியுள்ளார். இதற்கு ஏற்கனவே அவர் திட்டமிட்டு இருந்ததாக கூறியுள்ளார். தற்போது லோக்ஆயுக்தா நீதிபதி விஸ்வநாத் ஷெட்டி சிகிச்சை பெற்று வருகிறார். இவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்று கூறப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக