திங்கள், 19 மார்ச், 2018

போலீஸ் அதிகாரிகள் வீட்டில் ஏராளமான காவலர்களும் வாகனங்களும் ,, உயர்நீதிமன்றம் கேள்வி !

Shankar A : · சிபி சிஐடியில் டிஜிபியாக இருந்தவர் நரேந்திர பால் சிங். ஐபிஎல்
உயரதிகாரிகளின்  வீட்டில்  காவலர்கள்?ஊழலில், பல கோடிகளை ஒற்றை ஆளாக ஆட்டையைப் போட்டவர்.. இவர் 30 ஏப்ரல் 2014 அன்று பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இவர் வீட்டில் இரண்டு வாகனம் ஓட்டும் காவலர்கள் மற்றும் உதவிக்கு வேலு மற்றும் மோகன் ஆகிய காவலர்களும், இவர்களைத் தவிர மற்றொரு உதவியாளரும் பணியாற்றுகின்றனர். ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டும், இன்னும் எத்தனை காவலர்கள் உயர் அதிகாரிகளின் வீட்டில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
 வால்டர் தேவாரம் ஐபிஎஸ் அரசுப் பணியில் இருந்து 31 ஜுலை 1997 அன்று ஓய்வு பெற்றார்.
இன்று வரை இவர் வீட்டில், 3 வாகனம் ஓட்ட 3 காவலர்கள், இதர பணிகளுக்கு 3 காவலர்கள் மற்றும் ஒரு உதவியாளர் ஆகிய 7 அரசுப் பணியாளர்கள் பணியாற்ற வருகின்றனர்.


minnambalam :காவலர்கள் மன அழுத்தத்தினால் பணியை விடுவதும், தற்கொலை செய்துகொள்வதும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. அவர்களின் மன அழுத்தம் தொடர்பான வழக்கை விசாரிக்கக் கோரி வழக்கறிஞர் புருஷோத்தமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் முறையீடு செய்தார்.

இதை விசாரித்த நீதிபதி கிருபாகரன், ”காவல் துறையினர் ஒரு மணி நேரம் வேலைநிறுத்தம் செய்தால் தமிழகத்தின் நிலை என்னவாகும். 24 மணி நேரமும் பணியில் இருக்கும் காவலர்களுக்கு ஓய்வு தேவை. குடும்ப விழா, பண்டிகைக் காலங்களில் காவலர்களுக்கு விடுப்பு அளிப்பதில்லை.
காவல் துறையில் 19,000 காலிப்பணியிடங்கள் இருப்பது உண்மையா? மன அழுத்தம் காரணமாக காவலர்கள் பணியைக் கைவிடுகின்றனர், இல்லாவிட்டால் தற்கொலை செய்துகொள்கின்றனர். 2012ஆம் ஆண்டு காவலர்களுக்கான ஆணையம் அமைக்க உத்தரவிட்டும்,ஏன் இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை.
காவலர்களுக்கான ஆணையம் 6 ஆண்டுகளாக அமைக்கப்படாததால்தான் மரணங்கள் அதிகரித்தன. இதுதொடர்பாக,19ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று (மார்ச் 19) மீண்டும் இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதி கிருபாகரன் முன்பு வந்தது. அப்போது ”உயரதிகாரிகள், ஓய்வு பெற்ற உயரதிகாரிகளின் வீடுகளில் இன்னும் எத்தனை காவலர்கள் வேலை செய்கின்றனர். ஆர்டர்லி முறையை 1979ஆம் ஆண்டு ஒழித்து வெளியிட்ட அரசாணை என்னவானது.
ஏற்கனவே,வழங்கப்பட்ட தீர்ப்பின்படி, ஆணையம் உருவாக்குவது மற்றும் காவலர்களுக்கு மனநல ஆலோசனை வழங்குவது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 22ஆம் தேதிக்குள் உள்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அப்படி அறிக்கை தாக்கல் செய்யத் தவறும்பட்சத்தில், அவர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும். மனித உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பது குற்றவாளிகளுக்கு மட்டுமல்ல, காவலர்களுக்கும்தான்.
காவலர்களுக்குக் கொடுக்கப்படும் மன அழுத்தமே மக்களின் மீது கோபமாக மாறுகிறது. உஷா மரண சம்பவத்தில் மூல காரணமே கணவர் தலைக்கவசம் அணியாததுதான். பாதுகாப்புப் பணிக்குச் செல்லும் காவலர்கள் ஆண், பெண் என்ற வித்தியாசமின்றி நிற்க வைக்கப்படுகிறார்கள்” என நீதிபதி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக