புதன், 14 மார்ச், 2018

சென்னை: சாலையோர வாகனங்கள் பறிமுதல்!

சென்னை: சாலையோர வாகனங்கள் பறிமுதல்!சென்னையில் சாலையோரங்களிலும், நடைபாதைகளிலும், தெருக்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மின்னம்பலம்: உபயோகமற்ற மற்றும் பழுதடைந்த வாகனங்களை அகற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் முக்கியச் சாலைகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பைக், கார்,ஆட்டோ உள்ளிட்ட பழைய வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும், போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்
இந்நிலையில், பழைய வாகனங்களை 15 நாட்களுக்குள் அகற்றச் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அவ்வாறு அகற்றப்படும் வாகனங்கள் 3 இடங்களில் வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, வடசென்னை 1 முதல் 5 மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் ராயபுரம் மண்டலம்,சூளை அவதான பாப்பையா தெருவில் உள்ள மாநகராட்சி இடத்தில் நிறுத்தி வைக்கப்படும்.
மத்திய சென்னை 6 முதல் 10 வரையிலான மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் மேயர் சத்தியமூர்த்தி சாலையில் கெங்கு ரெட்டி சுரங்க பாதை உள்ள மத்திய தார் கலவை நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்படும். தென்சென்னை 11 முதல் 15 மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் பள்ளிக்கரணை பழைய குப்பை கொட்டும் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்படும். பின்னர் அந்த வாகனங்கள் அங்கு வைத்து மாநகராட்சி சார்பில் ஏலம் விடப்படும்.
சென்னை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல மாதங்களாக பைக், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்திற்குப் பாதிப்பும் ஏற்படுகிறது. மேலும், அந்த வாகனங்களில் மழைநீர் தேங்கி கொசு உற்பத்தியும், பொது சுகாதாரச் சீர்கேடும் ஏற்படுகிறது. பொதுமக்கள் , தங்களுக்கும் இடையூறு ஏற்படுவதாகப் புகார் அளித்து வருகின்றனர். அதைத் தடுக்கும் வகையில் சாலையோரங்கள், நடைபாதைகள் மற்றும் தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உபயோகமற்ற, பழுதடைந்த வாகனங்கள் அகற்றப்படவுள்ளது. எனவே, பழைய வாகனங்களை நிறுத்தி வைத்துள்ள வாகன உரிமையாளர்கள், 15 நாட்களுக்குள் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும். அவ்வாறு அகற்றப்படாத வாகனங்களைச் சென்னை மாநகராட்சி காவல்துறை உதவியுடன் அப்புறப்படுத்தும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக