புதன், 28 மார்ச், 2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் புதிய சிக்கல் - மீண்டும் உச்சநீதிமன்றம் செல்கிறதா வழக்கு?

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் புதிய சிக்கல் - மீண்டும் உச்சநீதிமன்றம் செல்கிறதா வழக்கு?
மாலைமலர் :மாநிலங்களுக்கு இடையிலான கருத்து வேறுபாட்டை உச்ச நீதிமன்றம் தீர்க்க வேண்டும் என சட்ட அமைச்சகம் பரிந்துரை செய்திருப்பதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் புதிய சிக்கல் உருவாகும் என தெரிகிறது.
#CauveryManagementBoard  புதுடெல்லி: காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், கர்நாடக தேர்தலை காரணம் காட்டி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதில் தாமதப்படுத்தலாம் என்று பேசப்பட்டது. ஆனால், தேர்தலுக்கும் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதற்கும் தொடர்பு இல்லை என தலைமை தேர்தல் ஆணையர் தெளிவுபடுத்திவிட்டார். உச்ச நீதிமன்றம் விதித்த கெடு நாளையுடன் முடிய உள்ள நிலையில், தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மத்திய நீர்வளத் துறை செயலாளர் தலைமையில் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

ஆனாலும், பிற்பகல் வரை எந்த உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையே காவிரி மேலாண்மை வாரியம் விஷயத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதால் அதனை நீதிமன்றமே தீர்க்க வேண்டும் என மத்திய அமைச்சரவைக்கு சட்ட அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

இதனை மத்திய அமைச்சகம் ஏற்றால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் புதிய சிக்கல் ஏற்படுவதுடன், தாமதமும் ஏற்படும். இதுபோன்ற சூழ்நிலையில் இன்று நடைபெற உள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் பற்றி முடிவு எடுக்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. இதற்கிடையே காவிரி விவகாரம் தொடர்பாக மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு சென்றால், அது விசாரணைக்கு ஏற்கப்படுமா? என்பதும் சந்தேகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக