ஞாயிறு, 25 மார்ச், 2018

பாஜகவினர் அய்யாக்கண்ணுவை தாக்கினர் .. பழனியில் பரபரப்பு

நக்கீரன் -சக்தி: ayyakannu பழனியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு  விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகன்னு  மரபனு விதையின் தீமைகள் பற்றியும் விசாய நிலங்கள் கார்ப்பரேட்டுகளின் பினாமி சொத்துகளாக மாறுவதையும் கண்டித்து தமிழ்நாட்டில் தங்கள் குழுவுடன் சேர்ந்து 19 மாவட்டங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றார். மேலும் அதன் அடிப்படையில் இன்று திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பிரச்சாரம் செய்து முடித்துவிட்டு பழனி முருகனை தரிசிப்பதற்காக மாலை 5.00 மணிக்கு தனது சங்க உறுப்பினர்கள் 13 பேருடன் கோயிலுக்கு சென்று விட்டு 6.30 மணியளவில் மின் இழுவை ரயில்  வழியாக கீழே இறங்கியதும் அங்கு மறைந்திருந்த BJP கட்சிகாரர்கள் 15 பேர் அய்யாகண்ணு, சங்க உறுப்பினர்களை சரமாரியாக தாக்கத் தொடங்கினர்.  இதில் அய்யாகண்ணு பத்திரமாக காரில் அனுப்பி வைக்கப்பட்டார்.


  ஆனால் அவர் கார் மீது செருப்புகளை வீசினர்.  மேலும் அய்யாகனண்ணு ஒழிக என்று கோசமிட்டனர். மேலும் அவருடன் வந்த பிரகாஷ் வயது18 தஞ்சாவூர் (செய்தி தொடர்பாளர்) என்பவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். மயக்க நிலையில் உள்ள அவரை பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அவருடன் வந்த காமராஜ்.  ,விஜயகுமார்., ஆண்டவர் உள்பட சிலரையும் பிஜேபி யினர்   தாக்கியுள்ளனர்.  இது குறித்து  பாதிக்கப்பட்ட அய்யாக் கண்ணு  ஆதரவாளர்கள்  பழனி அடிவாரம்  காவல்துறையில் புகார் கொடுத்தின் பேரில் போலீசார்  வழக்கு  பதிவு செய்து  இருக்கிறார்களே தவிர   எந்த ஒரு  நடவடிக்கையும்  எடுக்கவில்லை .  இச் சம்பவம் பழனியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக