வியாழன், 15 மார்ச், 2018

மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா பிரேரணை .. ஜெகன் ரெட்டிக்கு சந்திரபாபு நாயுடு ஆதரவு !


Chandrababu Naidu May Not Just Quit PM's Coalition But Back Rival Jagan The TDP's support to the no-confidence motion moved in parliament today by Jagan Reddy's YSR Congress is designed as a signal that the party is willing to back its political rival for the sake of Andhra Pradesh.
நியுஸ் 18 :ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததால் மத்தியில் ஆளும் மோடி அரசு மீது நாளை நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஒய்எஸ்ஆர் கொண்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே நடந்த இடைத்தேர்தல்கள் மூலம் பாஜக தனது தனிப்பெரும்பான்மையை இழந்துள்ளது தெரிந்ததே 
  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ‘பிரஜா சங்கல்ப யாத்திரை’ என்ற பெயரில் ஆந்திராவில் நடைபயணம் மேற்கொண்டார். நெல்லூர் மாவட்டம் கலிகிரியில் கட்சியின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜெகன்மோகன் ரெட்டி  கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில அவர் பேசுகையில், “ ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்காத மத்திய அரசை கண்டித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் உள்ளேயும், வெளியேயும் போராடி வருகிறார்கள். ஏப்ரல் 5-ந் தேதி வரை நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளதால், அதுவரை எங்கள் கட்சி எம்.பி.க்கள் போராடுவார்கள்.  அதன்பின்னரும் சிறப்பு அந்தஸ்து அளிக்காவிட்டால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்து விட்டு ஊர் திரும்புவார்கள்” என்று தெரிவித்திருந்தார்.



இந்நிலையில், நாடாளுமன்றத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்பா ரெட்டி இன்று கூறுகையில், பா.ஜ.க அரசுக்கு எதிராக நாளை நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதாக தெரிவித்தார்.

இதனிடையே எந்தக் கட்சி மோடி அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தாலும் அதை ஆதரிப்பதாக தெலுங்குதேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.  நம்பிக்கையில்லா தீர்மான குறித்து காங்கிரஸ் பரிசீலனை செய்வதாக கூறியுள்ளது.<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக