வெள்ளி, 16 மார்ச், 2018

பஜக வின் சதி வலையில் காஞ்சி மடம் சீக்கிரம் விழப்போகிறது?

Vicky Kannan : நேற்று நடந்து முடிந்த நித்யானந்தா ஸ்வாமிகள்
தலைமையிலான காவிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட காஞ்சி தொண்டை மண்டல  ஆதினத்தின்  232 ஆவது ஆதினம் ஞானப்ரகாச ஸ்வாமிகள் , பஜக வின் பாதுகாவலர் எச்.ராஜா மற்றும் பஜக வின் பிற மாநில ,மாவட்ட பெரும் புள்ளிகள்.
கூட்டத்தின் முக்கிய நோக்கம்,நாடு முழுக்க இருக்கும் ஹிந்து கோவில்களை பாதுகாப்போம். ஹிந்து மதத்தை காப்பாற்ற ஒன்று திரள்வோம் என்பதே.
இதில் ஏற்கனவே நித்யானந்த ஸ்வாமிகள் மதுரை ஆதினத்தை பிடிக்க சில பல வேலைகள் செய்து, கடந்த வாரம் சென்னை உயர்நீதி மன்றம் மதுரை ஆதினத்திற்குள் நுழைய தடை விதித்தது.
திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள மடமும், திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள ஒரு குன்றில் சிறு வயதில் ஞானம் அடைந்தேன்னு சொல்லி அந்த மலையையும் தனது சீடர்களை கொண்டு ஆக்கிரமித்தபோது ,பொது மக்களே காவல் துறையிடம் புகார் அளித்து காலி செய்தனர்.

தற்போது ஞானப்ரகாச ஸ்வாமிகளை தன் வசப்படுத்தி,சுமார் 1000 கோடி சொத்து மதிப்பும் பல நூறு கோவில்களையும் கொண்டுள்ள காஞ்சி தொண்டைமண்டல ஆதினத்தை அபகரிக்க சில வேலைகள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்.
இதை சுமார் 6 மாதத்திற்கு முன்பே ஜூவி யிலும் ஒரு பிரசுரம் வெளிவந்தது. பின் நானும் களப்பணியில் ஈடுபட்டு ஆதினத்தின் உள் இருந்த நித்யானந்தா சீடர்கள் மற்றும் ஞானப்ரகாச ஸ்வாமிகளை சந்தித்தேன்.
சில காலம் காணாமல் போன ஆதினம், மீண்டும் பெங்களூரில் இருந்து திரும்பியதாக தானே வெளி வந்தார். பின் நிரூபர்களிடம்,'நித்யானந்தா சீடர்களை யாரும் கேள்வி கேட்க முடியாது..அவர்கள் இந்த மடத்தில் தான் பூஜை செய்வார்கள்' னு அவர் வாயாலே சொல்லிவிட்டார்.
பஜக வின் சதி வலையில் காஞ்சி மடம் சீக்கிரம் விழப்போகிறது என்பதற்கான அறிகுறியே இந்த கூட்டம். ஏற்கனவே சங்கர மட பெரியவா டிக்கெட் வாங்கிட, அடுத்த முன்பதிவில் ஆதினம் இருக்காரா? பொறுத்து இருந்து பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக