மின்னம்பலம் : மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அரசின் பட்ஜெட் இருக்கும் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
வரும் 15ஆம் தேதி காலை 10.30 மணியளவில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் தொடங்கவுள்ளது. அன்றைய தினம் துணை முதல்வரும், நிதியமைச்சருமான பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று (மார்ச் 10) செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வத்திடம் பட்ஜெட் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, "மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அரசின் நிதிநிலை அறிக்கை இருக்கும்" என்று பதிலளித்துள்ளார்.
மேலும் அவர், "மாணவி அஸ்வினியின் மரணம் உள்ளத்தையே உருக்குகிற துயர சம்பவம். அதற்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் மாணவ மாணவிகளின் பாதுகாப்பில் அரசு முழு கவனம் செலுத்தும்" என்றும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக