சனி, 31 மார்ச், 2018

ம.தி.மு.க. தொண்டர் தீக்குளிப்பு ! வைகோ நடைபயண நிகழ்ச்சியில் - மதுரையில் பதற்றம்

வைகோ நடைபயண நிகழ்ச்சியில் ம.தி.மு.க. தொண்டர் தீக்குளிப்பு - மதுரையில் பதற்றம்மாலைமலர் :நியுட்ரினோ ஆய்வு மையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ நடைபயணம் தொடங்கிய மேடையின் அருகே ம.தி.மு.க. தொண்டர் ஒருவர் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #NeutrinoProject #Vaiko #Madurai மதுரை: தேனி மாவட்டம், போடி அருகே உள்ள பொட்டிபுரம் மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.< இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மதுரையில் இன்று நடைபயணம் தொடங்கினார். அவரது பயணத்தை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். < இந்நிலையில், வைகோ விழிப்புணர்வு நடைபயணம் தொடங்கிய மேடையின் அருகே ஒருவர் திடீரென தீக்குளித்தார். அவரது உடல் முழுவதும் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.< விசாரணையில் அவர் பெயர் சிவகாசியைச் சேர்ந்த ம.திமு.க. தொண்டர் ரவி என்பது தெரியவந்தது. தொண்டரின் இந்த செயலுக்கு வைகோ வருத்தமும் வேதனையும் தெரிவித்தார். அவர் விரைவில் நலம்பெற இயற்கை அன்னையை வேண்டிக்கொள்வதாக கூறிய வைகோ, தனது நடைபயணத்தை தொடங்கினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக