வெள்ளி, 9 மார்ச், 2018

சந்தையூர் தீண்டாமை சுவர் .. எவிடென்ஸ் கதிர் வழக்கு தள்ளுபடி ... உயர் நீதிமன்றம்

Arul Rathinam  : "தீண்டாமைச் சுவரை காக்க எவிடன்ஸ் கதிர் வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி! ஊடகங்கள் சாதி ஆணவத்தை விவாதிக்குமா?"
-----------------------
மதுரை சந்தையூர் தீண்டாமைச் சுவரை நான்கு மாதங்களில் இடிக்க 21.08.2017-ல் உயர்நிதிமன்றம் ஆணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து வின்சென்ட் ராஜ் என்கிற எவிடன்ஸ் கதிர், மேல்முறையீடு செய்தார்.
எவிடென்ஸ் கதிரின் மனுவை ஏற்று 30.01.2018-ல் உயர்நிதிமன்றமும் தீண்டாமைச் சுவரை இடிக்க இடைக்காலத் தடை விதித்தது. இந்தத் தடையை எவிடன்ஸ் கதிர் கொண்டாடினார். கூடவே, சட்டத்தின் துணைக்கொண்டு சந்தையூர் தீண்டாமைச் சுவரை நிரந்தரமாக காப்பாற்றுவோம் என்று சவால் விட்டார்.
இந்நிலையில், எவிடென்ஸ் கதிர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. கூடவே, சந்தையூர் தீண்டாமை சுவரை இடிக்கவேண்டும் என்கிற முந்தைய உத்தரவை சென்னை உயர்நிதிமன்றம் மீண்டும் உறுதிசெய்துள்ளது.

# தீண்டாமை சுவர் இடிக்கப்படுமா? அல்லது எவிடன்ஸ் கதிர் உச்சநீதிமன்றம் சென்று தீண்டாமைச் சுவரைக் காப்பாரா?
# தீண்டாமை சுவரை காப்பாற்றக் கோரும் எவிடன்ஸ் கதிர், விசிகவினரின் சாதி ஆணவத்தை இனியும் ஊடகங்கள் அமைதியாக வேடிக்கை பார்க்குமா? அல்லது நீதிக்காக விவாதம் நடத்துமா?
Arul Rathinam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக