சனி, 10 மார்ச், 2018

சிரியா போர் .. இன்னொரு இராக் , லிபியாவை போன்று ஒரு தேசத்தை ... வெறி .

Ellaam Samam : சிரியாப் போரை தவறான புரிதலோடு விடுதலைபெற மக்கள் அதிபருக்கெதிராகப் போராடுவதாக ஒருவர் ஒர் ஒளிப்பதிவில் சொல்லி இருந்தார். அவர் முழுக்க முழுக்க மேற்கத்திய ஊடகத்தால் தவறான புரிதலுக்குத் தள்ளப்பட்டவர்.
மதவெறியாலும் மற்ற நாடுகளின் தூண்டுதலாலும் கெட்டழிந்த அறிவற்ற இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்கள் (நூற்றுக்கணக்கான குழுக்கள், உலகின் இந்தியா, சீனா, ரசியா, பாகிஸ்தான், அனைத்து அரேபிய நாடுகள் என எல்லா நாடுகளிலிருந்தும் வந்தவர்கள்) ஒருபக்கம். மக்களின் நலம் விரும்பும் லண்டனில் கண் மருத்துவம் படித்த அருமையான டாக்டர் ஆசாத் அவர்களுக்கும் நடக்கும் போரே சிரியா கலவரங்கள். நன்கு படித்தவர், நல்ல அறிவாளி என்பதால் தான் தன் குடும்பம் எப்போதுவேண்டுமானாலும் கொல்லப்படலாம் என்று தெரிந்தே அந்த மத வெறிபிடித்த சன்னி பிரிவு இஸ்லாமியர் (பாகிஸ்தான், சவூதி அரேபியா, ஐக்கிய அரேபிய எமிரேட்) அதிகம் வாழும் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ்ஸிலிலேயே டாக்டர் ஆசாத் அவர்களும் வாழுகிறார்.

தான் ஒரு சிறந்த டாக்டராக வாழவேண்டும் என்பதே ஆசாத் விருப்பம். அதனால் டமாஸ்கஸ் மருத்துவ பலகலைக்கழகத்தில் மருத்துவர் பட்டம் பெற்றபின் மேல் மருத்துவ படிப்புக்காக லண்டன் சென்று படித்தார். அவர் தந்தை ஆசாத்தின் அண்ணன் பஸ்ஸெல் அவர்களையே அரசியல் வாரிசாக வளர்த்தார். ஆசாத் அரசியலை விரும்ப வில்லை. சஞ்சய்-ராஜீவ் கதையேதான்.
பஸ்ஸெல் கார் விபத்தில் இறந்தார்/கொல்லப்பட்டார். அதனால் ஆஸாத் அரசியலுக்கு அவர் தந்தையாலும் அவர் பிறந்த இனமான ஆலவைட் இஸ்லாமியத் தலைவர்களாலும் கட்டாயப்படுத்தப்பட்டே அரசியலுக்கு வரச் சம்மதித்தார் டாக்டர் ஆசாத். டாக்டர் தோழர் குவேரா போலவே (செ குவேரா, அவரும் ஒரு மருத்துவரே, ஆனால் படிப்பில் ஆசாத் கெட்டிக்காரர் குவேராவை விட) ஒரு மருத்துவரே.
எல்லா போராட்டங்களைப்போல சிரியாப் போராட்டமும் மக்களுக்கும் அடக்குமுறை அரசுக்கும் நடக்கும் போராட்டமல்ல.
அது எல்லாமதங்களையும் மதித்து (கிருத்துவர், குர்த்மத-குர்த், இஸ்லாம் மத-குர்த், ஆஸ்சிரிய கிருத்துவர், ஸன்னி-இஸ்லாமியர், ஸைட்-இஸ்லாமியர், ஆலவைட்—இஸ்லாமியர்) என பல மதத்தவர்களையும் மதித்து பெண்கள் விடுதலை, பெண் கல்வி என முற்றிலும் ஒரு மிக உயர்ந்த நாகரிகத்துக்கும் பண்புகளுக்கும் சிரியாவை எடுத்துச் செல்ல விரும்பும் டாக்டர் ஆசாத் அவர்களும் அவரை ஆதரிக்கும் அறிவாளிகளும் நாடுகளும் (இந்தியாவும் சேர்த்து) ஒரு பக்கமும் ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள்போல் இஸ்லாமியத்தின் பேரில் இஸ்லாத்துக்கு தொடர்பே இல்லா அடக்குமுறைகளைக் கொண்டு மக்களை அடிமை மிருகங்களாக ஆள நினைக்கும் தீவிரவாதிகளும் அவர்களைப் பல சுயநலக் காரணங்களுக்காக ஆதரித்து உதவிவரும் நாடுகளும் இன்னொருபக்கமுமாக நடைபெறும் போரே சிரியாப் போர்.
அணு காந்த்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக