ஞாயிறு, 4 மார்ச், 2018

கேரளாவை முந்திக்கொண்டு திரிபுரா கல்வியில் முதல் இடம்... மாணிக் சர்க்கார் ஆட்சியில்

Abdullah M Ajmee : யானைத் தன் தலையில் தானே மண்ணள்ளி போட்டுக்கொண்ட நிகழ்வுதான் திரிபுராவில் நடந்துள்ளது.
கடந்த பல வருடமாக மாணிக் சர்க்கார்த்தான் திரிபுராவின் CM ஆக உள்ளார் (மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட்). கிட்டத்தட்ட 20 வருடங்கள் முதல்வராக இருந்த போதிலும் அவரிடம் சொந்த கார்க்கூட இல்லை. முதல்வராக பெரும் சம்பளத்தையும் கட்சிக்காக செலவு செய்துவிட்டு கட்சியின் சார்பில் வரும் சம்பளத்திளும் மனைவியின் ஓய்வூதியத்திலும் மட்டுமே வாழ்வை மேற்கொள்கிறார்.
இந்தியாவிலேயே குறைந்த பணம் கொண்ட CM பட்டியலில் முதலிடம் மாணிக் சர்காருக்கு.ஊழல் குற்றச்சாட்டும் ஏதும் இல்லாத முதல்வர்.இதனாலேயே கட்சிக்குள் சம்பாரிக்க முடியாமல் இவருக்கு எதிரா கிளர்ச்சி செய்பவர்களெல்லாம் உண்டு.
அரசாங்க செயல்களிலும் சரி,
2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி திரிபுரா கல்வி வளர்ச்சியில் 14 வது இடம்.2011 கணக்கெடுப்பின்படி 4 வது இடம்.2014 தற்காலிக கணக்கெடுப்பின்படி கேரளாவை முந்திக்கொண்டு திரிபுரா கல்வியில் முதல் இடம் பிடித்தது.இன்றுவரை அதுதான் உள்ளது.இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.இந்த வளர்ச்சிக்கு முழுக்க முழுக்க இவர் கல்வியின் மீது செலுத்திய புது புது திட்டங்களே காரணம்.
அப்படிப்பட்டவரை தோற்கடித்து பெரும் வரலாற்று பிழையை செய்துவிட்டனர் திரிப்புரா மக்கள்.
விளைவை விரைவில் அனுபவிப்பீர்கள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக