செவ்வாய், 27 மார்ச், 2018

சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. டாக்டர் சிகிச்சை.. உறவினர்கள் குவிந்தனர்

Veera Kumar - Oneindia Tamil தஞ்சாவூர்: தஞ்சையில் தங்கியுள்ள சசிகலாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் அவரது உறவினர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 'புதிய பார்வை' ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் கடந்த 20ம் தேதி அதிகாலை சென்னையில் மரணம் அடைந்தார். இதையடுத்து, அவரது உடல் தஞ்சை கொண்டுவரப்பட்டு 21ம் தேதி மாலை அடக்கம் செய்யப்பட்டது. 
 நடராஜன் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக, பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா, 15 நாள் பரோலில் வெளியே வந்தார். தஞ்சையில் தங்கியுள்ள சசிகலா தஞ்சையில் தங்கியுள்ள சசிகலா நடராஜனின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் சசிகலா கலந்து கொண்டார். 
தற்போது தஞ்சை அருளானந்த நகரில் உள்ள வீட்டில் சசிகலா தங்கி இருந்து வருகிறார். தஞ்சாவூரை விிட்டு வெளியே போக கூடாது என்ற கோர்ட் நிபந்தனையை ஏற்று அவர் வேறு எங்குமே செல்லவில்லை என்று கூறப்படுகிறது. சசிகலா தங்கியுள்ள வீட்டுக்கு செல்லும் உறவினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். 
 
 இந்த நிலையில் சசிகலா நேற்று காலையில் இருந்தே திடீரென சோர்வாக காணப்பட்டுள்ளார். பின்னர் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவரை யாரும் சந்திக்க வேண்டாம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். சசிகலாவை யாருமே சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.
 இதனைத் தொடர்ந்து நேற்று இரவு 7 மணியளவில் டாக்டர் கணபதி, சசிகலாவுக்கு சிகிச்சை மேற்கொண்டுள்ளார். உடல்நிலையை பரிசோதித்து பார்த்த அவர், சசிகலா நலமுடன் உள்ளார் என்றும், அவரது உடல் சோர்வாக காணப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார். சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட தகவல் தெரிந்ததும், அவரது சகோதரர் திவாகரன் மன்னார்குடியில் இருந்து தனது குடும்பத்தினருடன் தஞ்சை வந்து சசிகலாவை சந்தித்து உடல் நலம் விசாரித்ததாக கூறப்படுகிறது. இதேபோல உறவினர்கள் குவிகிறார்களாம். 
 
 பெங்களூர் சிறையில் இருந்தபோதுதான், ஜெயலலிதாவுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது என்று ஆறுமுகசாமி கமிஷனில் கிருஷ்ணபிரியா, தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். ஜெயலலிதாவை போலவே சசிகலாவுக்கும் சர்க்கரை நோய் பிரச்சினை உள்ளது. மேலும், நடராஜன் மறைவையடுத்து சிறையில் இருந்து வெளியே வந்தபோது, அவரிடம் மிகவும் சோர்வு தென்பட்டதையும் அங்கிருந்தவர்களால் கவனிக்க முடிந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக