திங்கள், 12 மார்ச், 2018

மதிமாறன் : ஆன்மீக அரசியல்’ மூட்டை பூச்சியை ஆரம்பத்திலேயே நசுக்குவோம்

எம்.ஜி.ஆரை முன்னுறுத்தி தமிழகத்தைக் கொள்ளையடித்த கும்பல் மெல்ல ரஜினியின் பின் அணியாகுது. பள்ளிக் கல்வியைத் தனியார் மயமாக்கி, உயர் கல்வியைச் சூதாட்டமாக்கியவர் புரட்சித்தலைவர். அவர் ஆட்சியில் M.L.A. வாக, மந்திரியாக இருந்தவர்களே மருத்துவம், பொறியியல் கல்வி வியாபாரிகளாக அவதாரம் எடுத்தார்கள்.
அதில் ஒருவர்தான் A.C. சண்முகம். அதை மிக முறைகேடாகக் கையாண்டவர். அவர் பல்கலைக்கழத்திற்கு அங்கீகாரம் இல்லை என்று தெரிந்தும் பல மாணவர் வாழ்க்கையைச் சீரழித்தவர்.
கூவம் ஆற்றை ஆக்கிரமத்து அதில் பல்கலைக்கழகம் கட்டியவர். ஜெயலலிதா ஆட்சியில்தான், ஆக்கிரமித்த கட்டிடங்கள் இடித்துத் தள்ளப்பட்டது.
அந்தக் கல்வி யோக்கியர் கல்லூரியில் நின்று கொண்டு, இந்த ஆன்மீக யோக்கியர் கல்வியின் சிறப்புக் குறித்துப் பேசுகிறார்.
இவ்வளவு நாள் எம்.ஜி.ஆரின் சிறப்புகள், அவரோடான உறவுகள் குறித்துப் பேசாமல் இப்போது அள்ளிவிடுறார்.
சரி இருக்கட்டும். ‘வந்தவர்களுக்கெல்லாம் வாரிக் கொடுத்தார் புரட்சித் தலைவர்’ என்று அவர்களிடம் வாங்கியவர்கள் சொல்கிறார்கள். நீங்க என்ன ரசிகர்களுக்குக் குடுத்தீங்க?

இந்த ஆன்மீகம் அரசியலுக்கு வந்த பிறகு சமீபத்தில், கன்னியாக்குமரி தமிழன் புயலால் சிதைந்து, சீரழிந்தபோதுகூட அதைக் குறித்து ஒரு வார்த்தையும் சொல்லாமல், கர்நாடக ராகவேந்திரா மடத்துக்கு 10 கோடியை கொடுத்துட்டு,
இங்க நம்மகிட்ட வந்து பதவி கேக்குறார். இளிச்சவாயன் நாமதானே?
விரைவில் ஆன்மீகத்தோட சினிமாக்கள், கண்டிப்பா சட்டத்திற்குப் புறம்பா தமிழர்களைக் கொள்ளையடிக்கிற கட்டணத்தோடு வரும். அப்போ நாமளும் அதே ‘ஆன்மீக’ அரசியலையே கையாள்வோம். ஆன்மீகமே amount தானே.
இந்த ஆன்மீக மூட்டப் பூச்சியை நசுக்க அம்பேத்ரியம், பெரியாரியம், மார்ச்சியம் எல்லாம் தேவையில்லை.
‘தமிழ் ராக்கர்ஸ்’ போதும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக