வெள்ளி, 9 மார்ச், 2018

இது பெரியார் மண் ! போர்க்கோலம் பூணும் தமிழகம் !

வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் பெரியார் சிலையை கோழைத்தனமாக இரவில் கல்லெறிந்து தாக்கியிருக்கிறார்கள் பா.ஜ.க-வினர். கல்லெறிந்தவர்களை அங்கிருந்த பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வினவு :முன்னதாக திரிபுரா தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அங்கிருந்த தோழர் லெனின் சிலை பா.ஜ.க வானர கூட்டதினால் இடித்து சேதப்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து திரிபுராவில் லெனின் சிலை போல தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என எச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருந்தார்.
திருப்பத்தூரில் உடைக்கப்பட்ட பெரியார் சிலை
இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. சமூக வலைதளங்களில் பெரியார் என்ற ஹேஷ்டேக் நேற்று முதல் முன்னணியில் இருந்து வருகிறது. இது அனைத்திலும் எச்.ராஜாவை தமிழக மக்கள் கண்டித்து வருகிறார்கள்.
ம.க.இ.க தோழர்கள் பெரியார்-லெனினை உயர்த்திப் பிடிப்போம், பார்ப்பன பாசிஸ்டு கோல்வால்கரை கொளுத்துவோம் என அறிவித்து போராடிவருகிறார்கள். பெருங்களத்தூரில் நேற்று (6/03/2018) இரவு எச்.ராஜா-வின் உருவ பொம்மையை எரித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

தமிழகம் முழுவதும் இன்று (07/03/2018) ம.க.இ.க, புஜதொமு, புமாஇமு உள்ளிட்ட அமைப்புகள் முற்றுகைப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அனைத்தும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் எச்.ராஜாவின் கொடும்பாவி எரிப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதை அடுத்து இன்று காலை சென்னை திருவல்லிக்கேணியில் 7 பார்ப்பனர்களின் பூனூல் அறுக்கப்பட்டுள்ளது. இது பற்றிய செய்தி இந்தியன் எக்ஸ்பிரசில் வெளியாகியுள்ளது. மேலும் கோவை பா.ஜ.க அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளதாகவும் இந்தியன் எக்ஸ்பிர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.
”பெரியார் சிலை மீது கைவைக்க வந்தால் கை,கால்கள் வெட்டப்படும்” என வைகோ தெரிவித்திருக்கிறார். எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். திருமாவளவன், சீமான் உள்ளிட்டு தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சியினரும் எச்.ராஜாவை கண்டித்திருக்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க கார்ப்பரேட் சாமியார் ஶ்ரீஶ்ரீ ரவிசங்கர், பாபர் மசூதியை இந்திய முஸ்லீம்கள் விட்டுகொடுக்காவிட்டால் சிரியா போன்ற நிலைமை இங்கு ஏற்படும் என்று எச்சரித்துள்ளார். சிரியாவில் நடக்கும் போரில் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறி இருப்பதும், அங்கு சவுதி – அமெரிக்க ஆதரவு தீவிரவாத குழுக்களுக்கு எதிரான போரில் குழந்தைகள் கொல்லப்படும் படங்கள் வெளியாகி வருகின்றன. அது மக்களிடம் அச்சத்தை ஆற்றாமையையும் உருவாக்கியுள்ள நிலையில் அது போன்று இங்கு நடக்காமல் இருக்க நீதிமன்ற வழக்கை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு எச்சரித்துள்ளார் இந்த கார்ப்பரேட் சாமியார்.
ஏற்கனவே இந்துத்துவக் கும்பலால் இடிக்கப்பட்ட பாபர் மசூதியையும் அதன் இடத்தையும் முசுலீம்கள் உரிமை கொண்டாடக் கூடாது என்கிறார் ஶ்ரீஶ்ரீ. உடைக்கப்போகும் அடுத்த வேலை திட்டத்திற்கு தயாராகி கொண்டிருக்கிறார் எச்.ராஜா.
தேர்தல் வெற்றிகளை தொடர்ந்து தன்னை கேள்வி கேட்க யாரும் இல்லை என்ற தொனியில் தனது பாசிச திட்டங்களை அமல்படுத்திவருகிறது பா.ஜ.க மற்றும் அதன் இந்துத்துவ படை பரிவாரங்கள். அதன் தொடர்ச்சிதான் எச்.ராஜா மற்றும் ஶ்ரீஶ்ரீ ரவிசங்கர் ஆகியோரின் கருத்துக்கள்.
வெற்றிக்களிப்பில் மெய்மறந்து நாட்டைக் கொளுத்தும் காவிக்கும்பலுக்கு பெரியாரின் மண் சாவுமணி அடிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக