வியாழன், 1 மார்ச், 2018

ஸ்ரீ தேவிக்கு தேசியக்கொடி ... நடிகர் திலகத்துக்கு ?

Venkat Ramanujam :
🔹1960 - ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ,)சிறந்த நடிகருக்கான விருது.
🔹1962 - கலைமாமணி விருது
🔹1966 - பத்மஸ்ரீ
🔹1982 - நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்
🔹1984 -பத்மபூஷன்
🔹1995 - செவாலியர்
🔹1997 - தாதாசாகிப் பால்கே

இந்தியாவில் இருந்து 1962 ஆம் ஆண்டு அமெரிக்க அரசாங்கத்தின் கலாச்சார பரிமாற்றம் திட்டத்தின் கீழ் அமெரிக்கா சென்ற முதல் கலைஞன் சிவாஜி ..
இந்திய கலாச்சார தூதர் பாத்திரத்தில் அங்கு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப் கென்னடியை சந்தித்த போது அவரை கவுரவப்படுத்தும் விதமாக ஒரு நாள் நயாகரா நீர்வீழ்ச்சியின் கௌரவ மேயராக நியமித்து அதற்கான சாவியும் பெற்றது சிவாஜி ..
எகிப்து அதிபர் கமால் அப்தெல் நாசர் இந்தியாவிற்கு வருகை தந்த போது, அப்போதைய இந்திய பிரதமர், ஜவகர்லால் நேரு அனுமதி வழங்கப்பட்ட ஒரே தனி நபர் சிவாஜி..
ஆனாலும் சிவாஜி ஜுலை 21, 2001 மறைந்த போது ., அன்றைய பாஜக வாஜ்பேயி அரசு மற்றும் அதிமுக ஜெயலலிதா அரசு அவருக்கு #தேசியகொடி போர்த்தவில்லை ..

அவர்கள் நமது மீனம்பட்டி சிவகாசி பெண்ணை தேவதையாக கண்டார்கள் .நாமோ சுரண்டப்படும் ஆற்று மண்ணை மட்டும் இல்லை ., நமது மண்ணின் மைந்தர்களையும் மதிக்காமல் இருந்து உள்ளோம் ..
தேசியகொடி போர்த்தும் கரணிகள் தான் என்ன என்ற ஆராச்சியில் இறங்கி இனிமேல ஒன்றும் வர போவது இல்லை . கசந்தாலும் இது தான் உண்மை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக