சனி, 3 மார்ச், 2018

BBC :திரிபுரா சட்டசபை தேர்தல் இறுதி முடிவுகள் பாஜக வெற்றி

மு.நியாஸ் அகமது-பிபிசி தமிழ்:   தொடர்ந்து 25 ஆண்டுகள், இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து மொத்தம் 35 ஆண்டுகள் என இடதுசாரிகள் திரிபுராவை ஆட்சி செய்து இருக்கிறார்கள். அதன் முதல்வராக இருந்த மாணிக் சர்க்கார் மிகவும் எளிமையான முதல்வர் என பெயரெடுத்தவர்.
;ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் மாணிக் சர்க்காரைதான் நாட்டிலேயே குறைந்து சொத்துள்ள முதல்வர் என கோடிட்டு காட்டி இருந்தது. அவருடைய சொத்து மதிப்பு 26 லட்சம் ரூபாயாகும்.
ஆனால், இன்று அக்கட்சி திரிபுராவில் ஆட்சியை இழந்து இருக்கிறது. இதற்கு என்ன காரணம்? எப்படி இடதுசாரிகள் தொடர்ந்து ஆட்சி செய்த ஒரு மாநிலத்தில், வலதுசாரி கட்சியான பா.ஜ.கவால் ஆட்சியை பிடிக்க முடிந்தது? இத்தனைக்கும் பா.ஜ.க கடந்த தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இப்போது இந்த வெற்றி எப்படி சாத்தியமானது?g>'கொள்கை வெற்றி அல்ல`
இது பாரதிய ஜனதா கட்சியின் சித்தாந்தத்திற்கு கிடைத்த வெற்றி என்ற புரிதலில் நாம் இந்த தேர்தல் முடிவுகளை அணுக கூடாது என்கிறார் அரசியல் செயற்பாட்டாளரான ஆழி செந்தில்நாதன்.

அவர், "இவர்கள் யாருடன் கூட்டணி வைத்து இந்த வெற்றியை அடைந்து இருக்கிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும். திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி உடன் இணைந்துதான் இந்த வெற்றியை பெற்று இருக்கிறார்கள். இந்த பூர்வகுடி மக்கள் முன்னணி கட்சி ஒரு காலத்தில் பிரிவினைவாதம் பேசிய கட்சி, தனி நாடு கேட்ட கட்சி. ஆனால், அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், இதனுடன் கூட்டணி அமைத்தது பா.ஜ.க" என்கிறார். e>திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி பல காலமாக அளும் இடதுசாரிகள் கட்சிக்கு எதிராகப் போராடி வருகிறது. இதனை சரியாக புரிந்து கொண்டு களம் கண்டு இருக்கிறது பா.ஜ.க. அதுமட்டுமல்ல, வட கிழக்கு மாநிலங்களில் ஆளும் கட்சிகளுக்கு எதிராக மனநிலை கொண்ட அமைப்புகளை அணிதிரட்டும் வேலையை 2014 ஆம் ஆண்டே தொடங்கிவிட்டது பா.ஜ.க. என்கிறார் செந்தில்நாதன்.
இது குறித்து விவரிக்கும் அவர், "அந்த பிராந்தியத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுக்குன் எதிராக பத்து கட்சிகள் கூட்டணி அமைத்து `வட கிழக்கு பிராந்திய அரசியல் முன்னணி`யை உருவாக்கியது. பா.ஜ.க இதன் பின்னணியில் இருந்தது. இப்படியான திட்டமிடலால்தான் பா.ஜ.க வெற்றி அடைந்து இருக்கிறது" என்கிறார்.
'வலுவாக இருக்கிறோம்'
இடது முன்னணி பெற்றுள்ள வாக்கு சதவீதம் 45 சதவீதம். இப்போதும் நாங்கள் வலுவாகதான் இருக்கிறோம் என்கிறார் சி.பி.எம் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினராக ஜி. ராமகிருஷ்ணன்.<>அவர், "பா.ஜ.க பண விநியோகம் செய்து இருக்கிறது. அதுமட்டுமல்ல, திரிபுராவில் உள்ள 3174 வாக்கு சாவடிகளில், தேர்தல் அன்று 591 வாக்கு இயந்திரத்தில் பிரச்சனை ஏற்பட்டது. இதில் ஏதேனும் முறைகேடு நடந்து இருக்குமோ என்று நான் சந்தேகிக்கிறேன்." என்கிறார்.
தேர்தல் தோல்விக்கான காரணத்தை திரிபுரா மாநிலக் குழுவும், மத்திய குழுவும் ஆராய்ந்து, விரிவான விளக்கத்தை விரைவில் தரும் என்று ஜி. ராமகிருஷ்ணன் கூறினார்.
'வளர்ச்சிக்கான வெற்றி'
இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கும் பா.ஜ.கவின் தேசிய பொதுக்குழு உறுப்பினரான் ஆசீர்வாதம் ஆச்சாரி இது வளர்ச்சிக்கான வெற்றி என்கிறார் . அவர், "கம்யூனிசம் என்பது காலாவதியான சித்தாந்தம். அது எங்கு வடிவம் பெற்றதோ, அந்த நாடுகளிலேயே இப்போது ஆட்சியில் இல்லை. சீனாவும் அந்த சித்தாந்தத்தை தற்காலத்திற்கு ஏற்றார் போல வடிவமைத்துக் கொண்டது. ஆனால், இந்திய இடதுசாரிகள், காலாத்திற்கு ஏற்றார் போல் மாறாமல், வளர்ச்சிக்கு முட்டைக்கட்டைப் போட்டுக் கொண்டே வருகிறார்கள். அதுதான் அவர்கள் தோல்வி அடையக் காரணம்." என்கிறார்.
நாங்கள் தொடர்ந்து வளர்ச்சியை முன் வைத்தோம், வட கிழக்கு மாநிலங்களுக்கு இருப்பு பாதை அமைத்தோம். குறிப்பாக, அம்மக்கள் பா.ஜ.க ஆட்சி வந்தால் அங்கு அமைதி வரும் என்று நம்பினார்கள். இவைதான் எங்களுக்கு வெற்றியை கொண்டு வந்து தந்திருக்கிறது என்கிறார்.
"இந்த வெற்றியின் மூலமாக இன்னொன்றையும் அம்மக்கள் உணர்த்தி இருக்கிறார்கள். பா.ஜ.க வை மதவாத கட்சியாக சித்தரிப்பதை நாங்கள் எற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் அது. திரிபுராவில் உள்ள தேவாலயம் ஒன்று, ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை கூட்டத்தில் எங்களுக்கு வாக்களிக்காதீர்கள் என்று கிறிஸ்துவ மக்களிடையே பிரச்சாரம் செய்தது. ஆனால், அந்த பிரச்சாரத்தை புறந்தள்ளி எங்களுக்கு மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள்." என்கிறார் ஆசீர்வாதம் ஆச்சாரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக