சனி, 31 மார்ச், 2018

அமெரிக்க விசா கோரும், 7.1 லட்சம் பேர், குடியேற்றம் அல்லாத விசா 1.4 கோடி பேர் பாதிக்கப்படுவர்

   அமெரிக்க, 'விசா' விதிகளில், வருகிறது, அதிரடி ,மாற்றம்தினமலர் :புதுடில்லி,:அமெரிக்காவில், 'எச் - 1பி' விசா ரத்து செய்ய, அந்நாட்டு அரசு முடிவு செய்து உள்ளது.
 இதனால், வெளிநாடுகளைச் சேர்ந்த திறமையான தொழிலாளர்கள், அமெரிக்கா வருவது பாதிக்கும் என்ற கருத்து எழுந்துள்ளது. அமெரிக்க அதிபராக, டொனால்டு டிரம்ப் பதவியேற்றது முதல், 'வேலை வாய்ப்புகளில், அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்' என, வலியுறுத்தி, அதற்கேற்ப திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். முந்தைய அதிபர், ஒபாமா ஆட்சியின்போது, எச் - 1பி விசாவில், கணவர் - மனைவி, அமெரிக்காவில் வேலை செய்ய, எச் - 4 விசா அளிக்கப்பட்டது.
;இந்த விசா பெறுவோர், அமெரிக்காவில், எந்த நிறுவனத்திடமும் வேலை செய்யலாம். எச் - 1பி விசா பெறுவோர், குறிப்பிட்ட சில நிறுவனங்களில் மட்டுமே பணிபுரியலாம் என்ற கட்டுப்பாடு, எச் - 4 விசா வைத்திருப்போருக்கு இல்லை.
இதனால், திறமையான தொழிலாளர்களை ஈர்க்கும் கவர்ச்சியான நாடாக அமெரிக்கா திகழ்ந்து வருகிறது. இந்நிலையில், எச் - 4 விசா அளிக்கும் திட்டத்தை ரத்து செய்ய, அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.ஆனால், இந்த முடிவுக்கு, அங்குள்ள சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.



எச் - 4 விசா வழங்குவது நிறுத்தப்பட்டால், திறமையான ஊழியர்களை கவரும் நாடாக, அமெரிக்கா இருக்காது என, இவர்கள் கூறுகின்றனர்.அமெரிக்காவில், 2015 முதல், 1.05 லட்சம் பேருக்கு, எச் - 4 விசா வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள்.



மொபைல் எண், இ - மெயில்விபரம் அளிக்க நிர்ப்பந்தம் அமெரிக்கா வருவதற்கு விசா கோரி விண்ணப்பிப்போர், அவர்களின் முந்தைய மொபைல் போன் எண்கள், இ - மெயில் முகவரிகள், சமூக வலைதள வரலாறு ஆகியவற்றை அளிக்கும்படி, டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசுநிர்ப்பந்தித்து வருகிறது.


அமெரிக்க அரசின் அதிகாரபூர்வ பதிவகத்தில் நேற்று வெளியிடப்பட்ட ஆவணத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:குடியேற்றம் அல்லாத விசாவில் அமெரிக்காவுக்கு வர விரும்புவோர், புதிய விதிப் படி, பல்வேறு கேள்விகளுக்கு தக்க பதில்களை ; அளிக்க வேண்டும்.விசா கோரி விண்ணப்பிப் போர், ஐந்து ஆண்டுகளாக பயன்படுத்திய, தற்போதைய மற்றும் முந்தைய மொபைல் போன் எண்கள், இ - மெயில் முகவரிகள், சமூக வலைதள வரலாறு ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.


ஏதாவது ஒரு நாட்டில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டவரா, அவரின் குடும்பத்தி னர், பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட வராஎன்பன குறித்த தகவல்களை அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


அமெரிக்க அரசின் புதிய விசா கொள்கையால், குடியேற்ற விசா கோரும், 7.1 லட்சம் பேர், குடியேற்றம் அல்லாத விசா கோரும், 1.4 கோடி பேர் பாதிக்கப்படுவர் என மதிப்பிடப்பட்டு உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக