வெள்ளி, 30 மார்ச், 2018

மலாலா 6 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் வருகை


tamilthehindu :இஸ்லமாபாத் விமான நிலையத்தில் குடும்பத்தினருடன் மலாலா அமைதிக்கான நோபல் விருதை பெற்றவரும் மனித உரிமை ஆர்வலருமான மலாலா ஆறு ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த நாடான பாகிஸ்தானுக்கு சென்றிருக்கிறார். தற்போது 20 வயதாகும் மலாலா பெண் கல்வி குறித்து பேசியதற்காக 2012ஆம் ஆண்டு தாலிபன் தீவிரவாதிகளால் சுடப்பட்டார். பின்னர் சிகிச்சைக்காக லண்டன் அனுமதிக்கப்பட்ட மலாலா, அதன் பின்னர் உடல் நலம் பெற்று தொடர்ந்து மனித உரிமை ஆர்வலராக செயல்பட்டு வருகிறார்.
ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் புதன்கிழமையன்று ரகசியாக குடும்பத்தினருடன் மலாலா பாகிஸ்தான் சென்றிருப்பதாக தகவல் வெளியாகியது. இஸ்லமாபாத் விமான நிலையத்தில் மலாலா அமர்திருக்கும் புகைப்படங்களும் பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியாகியது.
இந்த நிலையில் பாகிஸ்தான் சென்றுள்ள ‘Meet the Malala’ என்ற நிகழ்சியில் மலாலா பங்கேற்கிறார். மேலும் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ராணுவ தலைமை அதிகாரியையும் சந்திக்கிறார். மலாலா பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் ககான் அப்பாஸியை இன்று (வியாழக்கிழமை) சந்திக்க இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகமும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக