செவ்வாய், 20 மார்ச், 2018

15 நாட்கள் பரோலில் வெளியே வந்தார் சசிகலா- கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க தஞ்சை புறப்பட்டார்

15 நாட்கள் பரோலில் வெளியே வந்தார் சசிகலா-  கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க தஞ்சை புறப்பட்டார்மாலைமலர் :கர்நாடக சிறையில் இருந்து 15 நாட்கள் பரோலில் வெளியே வந்த சசிகலா, கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக தஞ்சாவூருக்கு புறப்பட்டார். பெங்களூரு: புதிய பார்வை ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவரது உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.< அஞ்சலிக்குப் பிறகு அவரது உடல் அவரது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் செய்யப்பட உள்ளது.
இதற்கிடையே நடராஜன் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. சிறை நடைமுறைகள் முடிந்த நிலையில் இன்று பிற்பகல் சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா, அங்கிருந்து தஞ்சாவூர் புறப்பட்டார். சாலை மார்க்கமாக சேலம், கரூர், திருச்சி வழியாக தஞ்சை சென்று அங்கிருந்து விளார் கிராமம் செல்கிறார்.சிறையில் இருந்து பரோலில் விடுவிக்கப்பட்டுள்ள சசிகலா தஞ்சாவூரில் மட்டுமே தங்கியிருக்கவேண்டும், சென்னைக்கு  செல்லக்கூடாது என்பது போன்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக