செவ்வாய், 27 மார்ச், 2018

கர்நாடக மாநில தேர்தல் 12-ம் தேதி ..ஒரே கட்டமாக ... 15 ம தேதி எண்ணப்படும்

கர்நாடக மாநிலத்தில் மே 12-ம் தேதி சட்டசபைத் தேர்தல் - தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்புமாலைமலர் :கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதம் 12-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். புதுடெல்லி:< கர்நாடக மாநிலத்தில் தற்போது நடைபெற்று வரும் காங்கிரஸ் அரசின் பதவிக்காலம் மே 28ம் தேதியுடன் நிறைவடைவதால் தேர்தல் நடத்தப்படுகிறது. இது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு மே மாதம் 12-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 17-ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய ஏப்ரல் 24ம் தேதி கடைசி நாள். மே 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும். 15-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்

புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் 99 சதவீதம் தயாராக உள்ளது. இந்த தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 56696 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். <
வாக்களிப்பதற்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும். மேலும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்வதற்காக விவிபிஏடி எந்திரங்களும் பயன்படுத்தப்படும். புகைப்படத்துடன் கூடிய வாக்குச்சீட்டுகள் தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே வாக்காளர்களுக்கு கொடுக்கப்படும்.

வாக்காளர்களுக்கு உதவி செய்வதற்காக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உதவி மையம் அமைக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் சிரமம் இன்றி வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். தேவையான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.

வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் 28 லட்சம் மட்டுமே தேர்தல் செலவு செய்ய அனுமதிக்கப்படும். வேட்பாளர்களின் செலவினத்தை கண்காணிக்க தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள். தேர்தல் விதிமுறைகளை மீறாமல் தடுக்க கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்படும்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பதால் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.



காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் இருந்து மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சட்டசபைத் தேர்தலில் இந்த விவகாரம் எதிரொலிக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக