திங்கள், 5 பிப்ரவரி, 2018

பக்கோடா விற்கும் எம் பி ஏ மாணவர்கள் ,,, மோடியின் பக்கோடா JOB ? pakoda janatha party ?

Ganesh Babu : 'நாட்டில் வேலை வாய்ப்புப் பெருகவில்லையே' என்ற கேள்விக்கு, "சாலையோரத்தில் கடை அமைத்து, பக்கோடா விற்று 200 ரூபாய்
சம்பாதிப்பதுகூட முன்னேற்றம்தானே" என்று ஆணவமாக பதிலளித்தார் பிரதமர் மோடி. இதைக் கண்டித்து வடநாட்டு மாணவர்களாவது 'பக்கோடா மோடி' என்று கலாய்ப்பதோடு நிறுத்தினார்கள்.
ஆனால், இந்த திமர்பிடித்த திராவிட இளைஞர்கள்தான் 'தரமான சம்பவம்' என்று வந்துவிட்டால் இரக்கமற்றவர்களாயிற்றே! 😍
பொங்களூரில் மோடியை கண்டிக்கும் விதமாக எம்.பி.ஏ மாணவர்கள் பலர் பி.ஜே.பி பொதுக்கூட்டம் நடந்த அரண்மனை மைதானத்தின் அருகில் பட்டதாரிகளின் கறுப்பு உடையோடு நிதானமாக உட்கார்ந்து பக்கோடா தயார் செய்தனர்.

பிறகு அதை எடுத்துக்கொண்டு, சாலைக்கு வந்து பி.ஜே.பியின் பொதுக்கூட்டப் பேருந்திற்கு உள்ளிருந்த காவிகள் உட்பட அங்கிருந்த அனைவருக்கும் 'மோடி பக்கோடா, மோடி பக்கோடா' என்று கூவிக்கூவி பக்கோடா கொடுத்து பார்ப்பன ஜனதா கட்சியை அதிரவைத்திருக்கிறார்கள்!
திராவிடர்களுக்கே உரிய அஞ்சாமையும், ஆதிக்க எதிர்ப்புணர்வும் அலாதியானது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக