வியாழன், 1 பிப்ரவரி, 2018

ஆண்டாளை வேசி என வார்த்தைக்கு வார்த்தை சொன்னது எச் ராஜா.... பொன்னாரை கேவலப்படுத்தியதும் பாஜக

ஸ்டாலின் அவர்கள் பொன். ராதாகிருஷ்ணனை, திராவிடம் இல்லாவிட்டால் மரமேறியாகத்தான் இருந்திருப்பார் என சொல்லவே இல்லை. ஆனால் ஸ்டாலின் அப்படி சொன்னதாக அவதூறு பரப்பப்பட்டது. யார் அவதூறு செய்தது? பிஜேபியின் மாவட்ட செயலாளரே அவதூறை ஆரம்பித்து வைக்கிறார்.
சரி ஏன் பிஜேபி இப்படி செய்யவேண்டும்? பொன் ராதாகிருஷ்ணன் பார்ப்பன லாபியால் எரிச்சலடைந்து நானும் திராவிடன் தான் என்று சொல்கிறார். அதற்கு அவர்களின் மறைமுக எதிர்வினை தான் இந்த மரமேறி! என்ன, அவர்களால் அதை நேரடியாக சொல்லமுடியவில்லை. எனவே ஒரு மாவட்ட செயலாளரை அதுவும் அதே சாதியை சேர்ந்த ஒருத்தரை தேர்ந்தெடுத்து இந்த அவதூறை பரப்புகிறார்கள். இதன்மூலம் ஸ்டாலினை குற்றம் சொன்னது போலவும் ஆச்சு, பொன்னாரை மறைமுகமாக சாதியை சொல்லி திட்டினா போலவும் ஆச்சு. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!
இதுதான் பார்ப்பனியம் காலங்காலமாக கடைபிடிக்கிற வழக்கம்!
ஆண்டாள் விஷயத் திலும் கூட இதேதான் நடந்தது.
எச் ராஜா விற்கும் ஆண்டாளுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது! ஆண்டாளைப் பற்றி இதற்கு முன்னர் பார்ப்பனர்களில் சிலர் கருத்து சொன்னபோது இவருக்கு எதுவும் பெரிதாக தெரியவில்லை. ஆனால் வைரமுத்து வேறொருத்தரின் கருத்தை மேற்கோள் காட்டி ஆண்டாள் தேவதாசியாக இருந்திருக்கலாம் என சொல்கிறார்.

வைரமுத்து சொன்னது தேவதாசி. இந்து மத மரபுப்படி தேவதாசி என்பது புனிதம். ஆனால் அதை எச் ராஜா எப்படி திரிக்கிறார் என பாருங்கள் : வைரமுத்து ஆண்டாளை வேசி என்கிறார்.
வார்த்தைக்கு வார்த்தை ஆண்டாளை வேசி என சொன்னது எச் ராஜா தான். அதாவது ஆண்டாளை வேசி என சொன்னதாகவும் ஆச்சு, வைரமுத்துவ உள்ள இழுத்து மத உணர்வை தூண்டிவிட்டதாகவும் ஆச்சு..!
இப்படித்தான் பாத்திரத்திற்கு ஏற்படி தன் வடிவத்தை மாற்றிக்கொள்ளும் தண்ணீர் போல பார்ப்பனியம் ஆளுக்கு தகுந்தாற்போல தன்னை தகவமைத்துக்கொள்கிறது..!
Sivasankaran Saravanan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக