வியாழன், 15 பிப்ரவரி, 2018

அதிமுக... அனிதா குப்புசாமி விலகினர் ... புஷ்பவனம் குப்புசாமிக்கு இசைக் கல்லூரி துணை முதல்வர் பதவி கிடைக்கவில்லை ...

அதிமுகவிலிருந்து விலகியது ஏன்: அனிதா விளக்கம்!
மின்னம்பலம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தவர் அனிதா குப்புசாமி. ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர் ஓபிஎஸ் அணி-சசிகலா அணி எனப் பிரிந்தபோது சசிகலா தரப்பில் அனிதா இருந்தார். ”சசிகலா விரைவில் தமிழக முதல்வராவார்; பன்னீர்செல்வம் போன்ற தீயவர்கள்தான் அதிமுகவிலிருந்து விலகியுள்ளனர்” என்றும் அவர் பேசியிருந்தார். பின்னர் எடப்பாடி- பன்னீர்செல்வம் அணிகள் ஒன்றிணைந்த பின்னர் கட்சியில் இருந்து ஒதுங்கியே இருந்த அனிதா தற்போது அதிமுகவிலிருந்தே விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (பிப்ரவரி 14) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஜெயலலிதா அழைத்ததால் அதிமுகவுக்குப் போனேன். தற்போது அவரே இல்லாததால் விலகிவிட்டேன். தற்போது உள்ளவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. அவர்களின் தலைமை பிடிக்கவில்லை. வேறு அணிக்குச் செல்லப்போவதில்லை. அரசியலில் இருந்தே விலகிவிட்டேன்” என்று விளக்கமளித்தார்.

தற்போது எந்தக் கட்சியும் மக்கள் சேவை குறித்து நினைப்பதில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தனது கணவர் குப்புசாமிக்கு இசைக் கல்லூரி துணை முதல்வர் பதவி கிடைக்கவில்லை என்பதாலேயே அனிதா அதிமுகவிலிருந்து விலகியுள்ளார் என்ற குற்றச்சாட்டையும் அவர் மறுத்துள்ளார்.
ஆனால் தொலைகாட்சி  பேட்டியின்   போது புஷ்பவனம் குப்புசாமியவர்கள்  எல்லா தகுதியும் இருந்தும் ஒரு தமிழானான எனக்கு அதுவும் இசைத்துறையில்  பி ஹெச் டி பெற்ற எனக்கு இது மறுக்கப்படுகிறது என்று கூறியிருந்தார் .. பாவம் முப்பது லட்சத்துக்கு இவர்கள் எங்கே போவார்கள்?
“எனது முகநூல் பக்கத்தில் நான் அரசியலில் இல்லை என்று கடந்த மாதமே பதிவிட்டுள்ளேன். பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ள அழைப்பு வந்துகொண்டே இருந்தது. போக விருப்பம் இல்லாததால் தவிர்த்துவிட்டேன்” என்று தெரிவித்த அவர், தற்போதைய அரசுக்கு மக்கள் மேல் அக்கறை இல்லை என்பதாலேயே விலகியதாகக் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக