ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

சுடுஎண்ணெயில் வடை சுட்ட பாட்டி அம்பலம் ..

மதுரை அன்புமதி :வருசந் தவறாம இந்த ஃப்ராடு பாட்டி கொதிக்கும் எண்ணைக்குள் கைவிட்டு வடைசுட்டுத் தருது.
இதுக்கு நாற்பது நாட்கள் சுத்தபத்தமா விரதமாம். கடவுளின் அருளால்தான் இதைச் செய்து வருவதாகப் பேட்டி வேறு.
பாட்டி பண்றது ஃப்ராடு வேலைன்னு பகுத்தறிவாளர்கழகத்தினரும் ஆண்டு முழுக்க பிரச்சாரம் செய்து, பாட்டி எப்படி தில்லுமுல்லு பண்ணுதுங்கிறதை தெருவில் மேடைபோட்டு விளக்கம் கொடுத்துக்கொண்டுதான் வருகிறார்கள்.
அப்படிப்பட்ட ஒரு மேடையில் அன்புமதியாகிய நானேகூட கொதிக்கும் எண்ணெய்ச் சட்டிக்குள் கைவிட்டு எடுத்திருக்கிறேன். எண்ணெய் கொதிக்கும்;ஆனால், சுடாது.
அதற்கு ஒரு மூலிகைச்சாற்றினை அந்த எண்ணெய்யில் சேர்க்கின்றனர். மூலிகைச் சாறு சேர்க்கப்பட்ட அந்த எண்ணெய்யை சட்டியில் ஊற்றி அடுப்பிலேற்றி நெருப்பு மூட்டினால், எண்ணெய் நன்கு கொதிக்கும். கையை விட்டுப் பார்த்தால் சுடாது.


பகுத்தறிவாளர்களின் இந்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தினால், கொதிக்கும் எண்ணெய் சுடாது என்கிற இந்த உண்மை, நம் நாட்டிலுள்ள ஃப்ராடு பத்திரிகைகளுக்கும் தெரியும்.
ஆனால் , ஃப்ராடுகளின் செயல்களையே உண்மை போல் பரபரப்புடன் வெளியிட்டு, மக்களை முட்டாளாக்கிக் காசு சம்பாதிக்கும் ஊடகங்கள், அதிலுள்ள பித்தலாட்டத்தை அம்பலப்படுத்துவதில்லை.
இதோ அத்தகைய ஃப்ராடு நாளேடுகளில் ஒன்றான தினத்தந்தி வெளியிட்டுள்ள ஃப்ராடின் செய்தி.
- #மதுரைஅன்புமதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக