செவ்வாய், 6 பிப்ரவரி, 2018

பக்கோடா ஜனதா பார்ட்டி .... நாட்டை ஆட்டைய போட்டாச்சு ... நீங்க போயி பக்கோடா கடை ..

Swathi K : இளைஞர்கள் வேலை இல்லாமல் இருப்பதை விட பக்கோடா விற்று பிழைக்கலாம். - அமிட்ஷா, மோடி & கோ. முதல் முறையாக நாட்டின் உண்மையான நிலையைப்பற்றி பேசி இருக்கிறார்கள் அவர்கள். எங்களால் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க முடியாது.. மோடி அரசாங்கம் வேலை வாய்ப்பு உருவாக்கும் என்று தவறான எண்ணத்தில் நேரத்தை வீணடிக்காமல் பக்கோடா, சமோசா போட்டு பிழைத்துக்கொள்ளுங்கள் மக்களே என்று சொல்லுகிறார்கள்.. ஏற்கனவே பக்கோடா, சமோசா விற்று பிழைத்தவர்கள் நிலை என்ன ஆகும்☺?? நாட்டின் நிலைமை போறத பாத்தா.. மக்கள் பக்கோடா, சமோசா வாங்குற நிலமையில் இருப்பார்களா என்று தெரியவில்லை🤔?? எப்படியோ நாட்டின் உண்மையான நிலையை முதல்முறையாக சொன்னதுக்கு நன்றி🙏. இந்த நாடு ஒரு மோசமான சூழ்நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது🙁. -
சுவாதி, திருநெல்வேலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக